வைரமுத்துவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின்னர் இளையராஜா உடன் கூட்டணி அமைத்து ஏராளமான சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார் வைரமுத்து. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இளையராஜா உடனான மோதலுக்கு பின்னர் ஏ.ஆர்.ரகுமான் உடன் கூட்டணி அமைத்தார் வைரமுத்து. இவர்கள் காம்போவும் செம ஹிட் அடித்தது. இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்த பாடலை உருவாக்க ஏ.ஆர்.ரகுமானுடன் சண்டை போட்டிருக்கிறார் வைரமுத்து.
24
ரட்சகன் பட பாடல் ரகசியம்
கூலி படத்தில் சைமன் என்கிற கதாபாத்திரத்தில் கலக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நாகர்ஜுனா. இவர் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு உருவான படம் தான் ரட்சகன். இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கி இருந்தார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் அதில் வாலி 2 பாடல்களையும், வைரமுத்து எஞ்சியுள்ள 6 பாடல்களையும் எழுதி இருந்தார்கள். இந்தப் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக வைரமுத்து எழுதிய ‘சந்திரனை தொட்டது யார்’ என்கிற பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
34
சந்திரனை தொட்டது யார் பாடல் உருவான விதம்
‘சந்திரனை தொட்டது யார்’ பாடலை எழுதிய போது தான் ரகுமானுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே சண்டை வந்ததாம். மொழியை காப்பாற்ற வைரமுத்துவும், இசையை காப்பாற்ற ரகுமானும் மோதி இருக்கிறார்கள். ‘சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா’ என்கிற வரியை வைரமுத்து எழுதிக் கொடுத்ததும், இது நல்லா இருக்கு, ஆனா பாட முடியாது என சொல்லி இருக்கிறார் ரகுமான். ஏனெனில் ஆம்ஸ்ட்ராங் என்கிற வார்த்தை மிகவும் கடினமாக இருப்பதாகவும், அதை மென்மையாக்குமாறு கேட்டிருக்கிறார் ரகுமான். இதற்காக வைரமுத்துவும் பல சொற்களை மாற்றி எழுதியும் எதுவும் செட் ஆகவில்லையாம்.
பாடலின் முதல் வரியையே தூக்கிவிட்டால் ஒட்டுமொத்த பாடலும் வேஸ்ட் ஆகிவிடும் என கூறி இருக்கிறார் வைரமுத்து, ஆனால் ஏ.ஆர்.ரகுமான் வேறு மாற்ற வேண்டும் என விடாப்பிடியாக இருந்திருக்கிறார். இறுதியாக ஹரிஹரன் வந்து பாடட்டும், அவரால் முடியவில்லை என்றால் மாற்றித் தருகிறேன் என சொல்லி இருக்கிறார் வைரமுத்து. ஹரிஹரன் வந்ததும், பாடல் வரிகளை பார்த்து மிகவும் இம்பிரஸ் ஆனதோடு, அவரின் மென்மையான குரலால் ஆம்ஸ்டிராங்க் என்பதை பாடியதைக் கேட்டதும் ஏ.ஆர்.ரகுமானும் வாயடைத்துப் போனாராம். இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.