மேலும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் மற்றும் பீஸ்ட் பட பிரபலம் ரெடின் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிக கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் (santhosh Narayanan) இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.