சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாரீசன் படத்தின் ரிலீஸ் நெருங்கி வந்தாலும் அப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரியளவில் நடைபெறவில்லை.
Vadivelu and Fahadh Faasil Maintain Silence about Maareesan Movie
மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின்னர் வடிவேலுவும், பகத் பாசிலும் மீண்டும் இணைந்து பணியாற்றி உள்ள திரைப்படம் தான் மாரீசன். இப்படத்தை சுதீஷ் சங்கர் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் கோவை சரளா, லிவ்விங்ஸ்டன், தேனப்பன், சித்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இது அந்நிறுவனத்தின் 98-வது படமாகும். டிராவலிங் திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற ஜூலை 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
24
மாரீசன் படத்தின் கதை
இப்படத்தின் கதைப்படி பகத் பாசிலை ஒரு திருடன். தான் திருடிய பைக்கில் நம்பர் பிளேட்டை மாற்றி செல்லும்போது ஒரு ஏடிஎம்மில் வடிவேலுவை பார்க்கிறார். அப்போது வடிவேலுவுக்கு ஏடிஎம் பின் நம்பர் மறந்துபோகிறது. அவரிடம் எங்க போகணும்னு கேட்கும் பகத் பாசில், அவரும் திருவண்ணாமலை போகணும்னு சொல்ல, அவரை பைக்கில் அழைத்து செல்கிறார். இந்த பயணத்தில் வடிவேலுவிடம் இருந்து பணத்தை அபேஸ் செய்ய முடிவெடுக்கிறார் பகத் பாசில். ஆனால் இந்த பயணத்தின் போது அவரின் மனம் மாறியதா அல்லது வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடினாரா என்பதை திரில்லர் கலந்து சொல்லி உள்ள படம் தான் இந்த மாரீசன்.
34
தலைவன் தலைவிக்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் மாரீசன்
மாரீசன் திரைப்படத்துக்கு போட்டியாக ஜூலை 25-ந் தேதி விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்காக ஒரு யூடியூப் சேனல் விடாமல் பேட்டி அளித்து வருகிறார் விஜய் சேதுபதி. மறுபுறம் நித்யா மேனன், பாண்டிராஜும் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளனர். ஆனால் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் மாரீசன் திரைப்படத்தின் புரமோஷன் காத்துவாங்கி வருகிறது. இப்படத்தை பற்றிய பேச்சும் சோசியல் மீடியாவில் இல்லை. இப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறதா என்பதே பலருக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு சுமாரான அளவில் புரமோஷன் செய்து வருகின்றனர்.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில், கிட்டத்தட்ட அஜித்தின் பாலிசியை தான் பின்பற்றி வருகிறார். ரஜினியின் வேட்டையன், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 போன்ற பிரம்மாண்ட படங்களின் புரமோஷனுக்கே தலைகாட்டாதவர், மாரீசன் போன்ற சின்ன பட்ஜெட் படத்தை கண்டுகொள்ள மாட்டார் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்திற்காக விழுந்து விழுந்து புரமோஷன் செய்த வடிவேலு, தற்போது மாரீசன் படத்தின் புரமோஷனில் தலைகாட்டாமல் இருப்பது பேசு பொருள் ஆகி உள்ளது. இப்படி வடிவேலு - பகத் பாசில் இருவரும் புரமோஷனுக்கு வராமல் டிமிக்கி கொடுக்கிறார்கள் என்றால், படக்குழுவும் டீசர், பாடல் வெளியீட்டு விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என எதுவும் நடத்தாமல் சைலண்ட் மோடிலேயே இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுமே படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.