Vaazhthugal Movie is Came without a single English word : ஒரு இங்கிலீஸ் வார்த்தை கூட இல்லாத தமிழ் படமா கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அது மாதவன் நடிப்பில் வந்த படம் தான். அதைப் பற்றி பார்க்கலாம்.
ஒரு இங்கிலீஸ் வார்த்தை கூட இல்லாத தமிழ் படம் வாழ்த்துகள்
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் சினிமாவிலும் தொழில்நுட்பத்தின் மூலமாக புதிய புதிய விஷயங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. அதில், மறைந்த நடிகர், நடிகைகளை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக சினிமாவில் காண்பிக்கிறார்கள். அந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அப்படியிருக்கும் போது தமிழ் சினிமாவில் இங்கிலீஸ் வார்த்தை கூட இல்லாத படம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை. சினிமாவில் பாடல்களில் இங்கிலிஸ் வார்த்தை கூட கலக்காமல் சுத்த தமிழ் வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி பாடல் எழுதிய பாடலாசிரியர் இருக்கிறார். அது போன்று தான் வெளிநாடே போகாமல் அங்குள்ள கலாச்சாரம், பழக்க வழக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு தமிழ் பாடல்களில் இங்கிலிஸ் வார்த்தைகளை புகுத்தி அந்த பாடலை ஹிட் கொடுத்த பாடலாசிரியரும் இருக்கிறார்.
25
வாழ்த்துகள், சீமான் பற்றி பேசிய டப்பிங் கலைஞர் சவிதா ரெட்டி
ஆனால், ஒரு இங்கிலிஸ் வார்த்தை கூட கலக்காமல் படத்தை கொடுத்த இயக்குநர் இருக்கிறாரா என்று கேட்டால் இருக்கிறார் என்பது தான் பதில். அவர் வேறு யாருமில்லை. இயக்குநர் சீமான் தான். இவருடைய இயக்கத்தில் மாதவன் மற்றும் பாவனா நடிப்பில் வந்த படம் தான் வாழ்த்துகள். இந்தப் படத்தில் ஒரு இங்கிலீஸ் வார்த்தை கூட பயன்படுத்தவில்லையாம். இந்த படத்தின் டப்பிங்கிற்கு வந்த நடிகை சவிதா ரெட்டி இது குறித்து கூறியிருக்கிறார்.
35
சீமான் இயக்கிய வாழ்த்துகள் படம்
வாழ்த்துகள் படத்திற்கு டப்பிங் பேசும் போது என்ன நடந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் ஒரு வார்த்தை கூட இங்கிலீஸ் இல்லை. தமிழ் பற்று பற்றி நான் அறிந்து கொண்டது இந்தப் படத்தில் தான். அதுவும் இயக்குநர் சீமானிடம் தான் நான் தெரிந்து கொண்டேன். டப்பிங் தொடங்கும் போது அசிஸ்டண்ட் இயக்குநர் கதை பற்றி சொல்லவா என்று கேட்டார். அதை கேட்ட பிறகு நான் ஸ்டூடியோவிற்கு சென்றேன். டயலாக் பேப்பரும் கொடுத்தார்கள். அதை படித்த பிறகு நான் ரெடியா டேக் போகலாமா என்று கேட்டேன்.
45
மாதவன், பாவனா நடித்த வாழ்த்துகள் படம் ஒரு இங்கிலீஸ் வார்த்தை கூட இல்லாத படம்
அதற்கு தயார் என்று உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. அதோடு வணக்கம் செல்வி சவிதா என்று சொன்னது நான் யார் என்று திரும்பி பார்த்தேன். அது சீமான் உடைய குரல். அதற்கு நான் ரெடி சார் என்று சொன்னேன். அதற்கு அவர் மறுபடியும் தயாரா என்று கேட்க, நானோ ரெடி சார் என்று மீண்டும் சொன்னேன். மீண்டும் அவர் தயாரா என்று கேட்டார். நான் தயார் சார் என்று சொன்னேன். கடைசி வரை அவர் விடவே இல்ல, அதன் பிறகு தயார் மட்டும் என்று சொன்னேன். இதைத் தொடர்ந்து சவுண்ட் இன்ஜினியர் பதிவு என்று குரல் கொடுத்தார்.
55
மாதவன் நடிப்பில் வந்த வாழ்த்துகள் படம் ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாத தமிழ் படம்
Recording Take என்று சொல்வதற்கு பதிலாக அவர் பதிவு என்று தமிழில் சொன்னார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று அனைவருமே தமிழில் தான் பேசினார்கள். இதைக் கேட்டு எனக்கு வியப்பாக இருந்தது. அங்கு தான் தமிழ் பற்று பற்றி நான் முழுமையாக தெரிந்து கொண்டேன். அதற்கு முழு காரணம் சீமான் தான் என்று கூறியுள்ளார்.