மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் விடாமுயற்சி படமும் ஒன்று. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், காமெடி நடிகர் யோகிபாபு, பிக் பாஸ் பிரபலம் ஆரவ், நடிகை ரெஜினா கசெண்ட்ரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து உள்ளது.
24
ரிலீசுக்கு ரெடியான விடாமுயற்சி
விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக விடாமுயற்சி உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் மட்டும் சுமார் 1000 திரைகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தில் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடித்தவர்களில் அதிக சம்பளம் வாங்கியதுஅ நடிகர் அஜித் தான்.
நடிகர் அஜித் குமாருக்கு ரூ.105 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் கோட் படத்தில் நடிக்கும் போது தான் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட் ஆனார். கோட் படத்திற்காக நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், நடிகர் அஜித் அவரை விட சுமார் 100 கோடி கம்மியாக சம்பளம் வாங்கி இருக்கிறார். அஜித்துக்கு அடுத்தபடியாக நடிகை திரிஷாவுக்கு தான் அதிக தொகை சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் ரூ.10 கோடி வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
44
விடாமுயற்சி பட நடிகர்களின் சம்பளம்
இதையடுத்து விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்துள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ரூ.3 கோடி வாங்கிய அர்ஜுன், இப்படத்திற்காக ரூ.5 கோடி வாங்கி இருக்கிறார். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா, நடிகர் ஆரவ், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் தலா ஒரு கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியும் ரூ.5 முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பார் என கூறப்படுகிறது.