மணிகண்டன் இல்ல; குட் நைட் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் இந்த ஹீரோ தானாம்! நோ சொன்னது ஏன்?

Published : Feb 03, 2025, 11:33 AM IST

நடிகர் மணிகண்டனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் குட் நைட், அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர் பற்றி பார்க்கலாம்.

PREV
14
மணிகண்டன் இல்ல; குட் நைட் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் இந்த ஹீரோ தானாம்! நோ சொன்னது ஏன்?
மணிகண்டனின் குட் நைட்

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தில் ராசாக்கண்ணு என்கிற கதாபாத்திரமாக இவரது நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் மணிகண்டனுக்கு ஹீரோவாக ஒரு அங்கீகாரத்தை கொடுத்த படம் என்றால் அது குட் நைட் தான். கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

24
குட் நைட் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ்

குட் நைட் திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருந்தார். மேலும் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், ரைச்சல் ரெபேக்கா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.25 கோடி வசூலித்து இருந்தது. குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின்னர் லவ்வர், குடும்பஸ்தன் என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து அசுர வளர்ச்சி கண்டுள்ளார் மணிகண்டன்.

இதையும் படியுங்கள்...  எங்க வீட்டுலையே என்ன Kidnap பண்ணி அங்க தூக்கிட்டு போனாங்க; ஷாக் கொடுத்த நடிகர் மணிகண்டன்!

34
குட் நைட் மணிகண்டனுக்கு வந்த படமில்லை

இப்படி மணிகண்டனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய குட் நைட் திரைப்படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகராம். அவர்தான் தன்னிடம் கால்ஷீட் இல்லாததால் மணிகண்டனை சிபாரிசு செய்து, இந்தப் படம் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் அசோக் செல்வன் தான். அவரை வைத்து தான் முதன்முதலில் குட் நைட் படம் உருவாக இருந்ததாம்.

44
குட் நைட் படத்தை மிஸ் பண்ணிய அசோக் செல்வன்

ஆனால் அந்த சமயத்தில் வேறு படங்களில் பிசியாக இருந்ததால், கதை பிடித்திருந்தும் கால்ஷீட் ஒதுக்கமுடியாமல் போய் உள்ளது. பீட்சா 2 படத்தில் பணியாற்றியபோது மணிகண்டன் உடன் பழக்கம் ஏற்பட்டதால், அவரை குட் நைட் படத்தில் நடிக்க வைக்கலாம் என்கிற ஐடியாவை இயக்குனருக்கு கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். மணிகண்டனுக்கு இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தாலும் அசோக் செல்வனின் கெரியரில் குட் நைட் படம் ஒரு காஸ்ட்லி மிஸ் ஆகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் படியுங்கள்... வசூலில் பொங்கல் ரிலீஸ் படங்களை தூக்கி சாப்பிட்ட குடும்பஸ்தன்; 3 நாளில் இத்தனை கோடியா?

click me!

Recommended Stories