'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? தீயாக பரவும் தகவல்!

Published : Feb 03, 2025, 10:33 AM IST

தளபதி விஜய் நடித்து வரும், ஜனநாயகன் படத்தின், முதல் லிரிக்கல் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.  

PREV
14
'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? தீயாக பரவும் தகவல்!
வசூல் மன்னனாக இருக்கக்கூடியவர் தளபதி விஜய்:

தமிழ் திரையுலகின் வசூல் மன்னனாக இருக்கக்கூடியவர் தளபதி விஜய். அதே போல் கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர் தான். இவருடைய படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கும் நிலையில் அதிரடியாக தன்னுடைய கடைசி படம் குறித்து, கடந்தாண்டு தளபதி விஜய் அறிவித்தார்.

24
தளபதி விஜயின் அரசியல் பயணம்:

இவருடைய இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களையும் அப்செட் ஆக்கினாலும், தளபதி விஜயின் அரசியல் பயணம் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. தற்போது தீவிரமாக தன்னுடைய அரசியல் பணியில் ஒருபுறம் விஜய் கவனம் செலுத்தி வந்தாலும், கமிட் ஆகி நடித்து வரும் 'ஜன நாயகன்' திரைப்படத்தையும் முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தளபதியின் கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தை இயக்குனர் எச் வினோத் பொலிட்டிகள் - ஆக்சன் திரைப்படமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

12 வருட போராட்டம்; சென்னையில் சொந்த வீடு வாங்கி குடியேறிய விஜய் டிவி சரத்! ரசிகர்கள் வாழ்த்து!

34
விஜய் போட்ட நிபந்தனை:

மேலும் காதல்,காமெடி, தளபதியின் பட்டையை கிளப்பும் டான்ஸுக்கும்... தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்க கூடிய மாஸ் காட்சிகளுக்கும் இந்த படத்தில் குறைவிருக்காது என கூறப்படுகிறது. மேலும் இது ஒரு அரசியல் படம் என்றாலும், தன்னுடைய படத்தில் எந்த ஒரு அரசியல் வாதியையும் டேமேஜ் செய்து விட கூடாது, தன்னுடைய படத்தை குழந்தைகள் முதல் அணைத்து அரசியல் தலைவர்களும் பார்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என கூறி இருந்தாராம். இதனை சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இயக்குனர் எச்.வினோத் தெரிவித்திருந்தார்.

44
முதல் லிரிக்கல் பாடல் பிப்ரவரி 14 ரிலீஸ் ஆகிறதா?

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்து வருகிறார். அவ்வப்போது இந்த படம் குறித்த சில அப்டேட்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தை சுற்றி வருகிறது. அதன்படி பிப்ரவரி 14-ஆம் தேதி, இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும், இது ஒரு காதல் பாடல் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சன் டிவி சீரியல் ஹீரோ அஸ்வின் கார்த்திக்கிற்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!
 

click me!

Recommended Stories