பொங்கல் ரேஸில் இருந்து ஜனநாயகன் திரைப்படம் விலகிய நிலையில், பராசக்தி படத்துக்கு போட்டியாக கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமாவுக்கு சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் படமும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என்கிற நிலை இருந்தது. கடந்த வாரம் வரை இது அண்ணன் - தம்பி பொங்கல் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் சென்சார் போர்டு போட்ட முட்டுக்கட்டையால், பொங்கல் ரேஸில் இருந்து ஜனநாயகன் திரைப்படம் விலகியது. இதனால் பொங்கல் ரேஸில் அடுத்தடுத்து புதுப்படங்கள் களமிறங்கிய வண்ணம் உள்ளன.
24
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வா வாத்தியார்
அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் திரைப்படம் பொங்கல் ரேஸில் குதித்துள்ளது. இப்படம் வருகிற ஜனவரி 14ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பராசக்தி படத்துக்கு கடும் போட்டியாக வா வாத்தியார் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொங்கலுக்கு ஜனநாயகன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை கார்த்தியின் வா வாத்தியார் படம் நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் எந்த அளவுக்கு வசூல் வேட்டையாடும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
34
பொங்கல் ரேஸில் வா வாத்தியார்
வா வாத்தியார் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், இளவரசு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் காதலும் கடந்து போகும். அப்படம் திரைக்கு வந்து சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் அவரின் அடுத்த படமாக வா வாத்தியார் திரைக்கு வர உள்ளது.
வா வாத்தியார் இதற்கு முன்னர் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த மாதம் கூட இப்படம் ரஜினி பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆக இருந்து கடைசி நேரத்தில் தள்ளிப்போனது. இப்படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி இருப்பதால், இந்த ரிலீஸ் தேதியிலும் அப்படம் திரைக்கு வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அப்படம் ரிலீஸ் ஆகும் வரை அதை உறுதிபட கூற முடியாது. இந்த தடைகளை எல்லாம் மீறி அப்படம் திரைக்கு வருமா அல்லது, மீண்டும் தள்ளிவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.