சிம்புவிற்கு தாய் உஷா தந்த திடீர் சர்பிரைஸ்...! காஸ்லி கிஃப்டால் இன்ப அதிர்ச்சி..!

First Published | Nov 29, 2020, 4:39 PM IST

நடிகர் சிம்புவிற்கு, அவரது தாயார் உஷா டி.ராஜேந்தர் மகன் ஆசைப்பட்ட விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

நடிகர் சிம்பு தற்போது... பல கட்ட போராட்டங்களுக்கு பின், உடல் எடையை குறைத்து செம்ம ஸ்டைலிஷாக பழைய லுக்கிற்கு மாறியுள்ளார்.
மேலும் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
Tap to resize

ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
அவ்வப்போது தன்னுடைய ஸ்லிம் பிட் லுக்கில் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் உஷா ராஜேந்தர் தன்னுடைய செல்ல மகனுக்கு காஸ்லி பரிசை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நீண்ட நாளாகவே சிலம்பரசன் மினி கூப்பர் காரை வாங்க விருப்பப்பட்ட நிலையில் அதையே தன்னுடைய மகனுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
தனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிலம்பரசன் தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!