Udhayanidhi Stalin : பீஸ்ட் திரைப்படம் ஹிட்டா? ஃபிளாப்பா? - பதிலளித்த உதயநிதி..!

Published : Apr 19, 2022, 11:43 AM IST

Udhayanidhi Stalin : பீஸ்ட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி வெளியிட்டது. 

PREV
14
Udhayanidhi Stalin : பீஸ்ட் திரைப்படம் ஹிட்டா? ஃபிளாப்பா? - பதிலளித்த உதயநிதி..!

நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நடசத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

24

கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சன், பீஸ்ட் படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் நடிகர் விஜய் சிறப்பாக நடித்திருந்தாலும், சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இல்லாத திரைக்கதை காரணமாக இப்படம் விஜய் ரசிகர்களையே கவரவில்லை.

34

இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூலைக் குவித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்திருப்பதாக சில தியேட்டர் உரிமையாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

44

பீஸ்ட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி வெளியிட்டது. அவரிடம் பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி, நான் தொகுதி வேலை பார்க்க வந்திருக்கிறேன். பீஸ்ட் படம் தொடர்பான விவரங்களை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுவார்கள் எனக்கூறினார்.

இதையும் படியுங்கள்... Thalapathy 66 :சரத்குமாரை தொடர்ந்து ‘தளபதி 66’ படத்தில் இணையும் 80ஸ் நாயகன்... விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாராம்

Read more Photos on
click me!

Recommended Stories