Thalapathy 66 :சரத்குமாரை தொடர்ந்து ‘தளபதி 66’ படத்தில் இணையும் 80ஸ் நாயகன்... விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாராம்

Published : Apr 19, 2022, 10:12 AM IST

Thalapathy 66 : ‘தளபதி 66’ படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

PREV
14
Thalapathy 66 :சரத்குமாரை தொடர்ந்து ‘தளபதி 66’ படத்தில் இணையும் 80ஸ் நாயகன்... விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாராம்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தளபதி 66. வம்சி இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

24

இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். பிரபல பாடலாசிரியர் விவேக், இப்படத்திற்கு திரைக்கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார். ‘தளபதி 66’ படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

34
mic mohana

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மோகன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகர் விஜய்யும், மோகனும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்லனர்.

44
mohan

1980-களில் தமிழ் திரையுலகின் பிளாக்பஸ்டர் நாயகனாக வலம் வந்த மோகன், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் கோலிவுட்டில் பிசியாகி உள்ள அவர், ஹரா என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... Vikram movie : வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா.... விக்ரம் படத்துக்காக கமல் போட்ட மாஸ்டர் பிளான்

Read more Photos on
click me!

Recommended Stories