மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் மாமன்னன். தன்னுடைய கெரியரில் கடைசி படமாக இது இருக்க வேண்டும் என்பதால், மிகப்பெரிய பட்ஜெட்டில் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூலம் இப்படத்தை தயாரித்து இருந்தார் உதயநிதி ஸ்டாலின். சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்து இருந்தனர்.
25
maamannan
இதில் உதயநிதி உடன் வடிவேலு, பகத் பாசில் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்திருந்ததால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 29-ந் தேதி பக்ரீத் பண்டிகையன்று திரைக்கு வந்தது. சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசியுள்ள இப்படத்திற்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.
படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்து வருவதோடு, வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. மாமன்னன் படத்தின் ரிசல்ட் ஆல் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள உதயநிதி ஸ்டாலின், இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். அதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
45
Maamannan
கார் பரிசளித்தபோது எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, நீண்ட நெடிய பதிவு ஒன்றையும் போட்டுள்ளார் உதயநிதி, அதில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது.
55
Maamannan
அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” என பதிவிட்டு இருந்தார். மாமன்னன் திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.25 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.