Valimai vs RRR : அஜித் ரசிகர்களை காண்டாக்கிய உதயநிதி.... ஆர்.ஆர்.ஆர் பட விழா பேச்சால் வெடித்த சர்ச்சை

Ganesh A   | Asianet News
Published : Dec 29, 2021, 06:08 PM IST

ஆர்.ஆர்.ஆர் பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய உதயநிதி, ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழகத்தின் 3 ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக தெரிவித்தார்.

PREV
17
Valimai vs RRR : அஜித் ரசிகர்களை காண்டாக்கிய உதயநிதி.... ஆர்.ஆர்.ஆர் பட விழா பேச்சால் வெடித்த சர்ச்சை

ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.

27

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். 

 

37

செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். 

47

அதன்படி வருகிற ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

57

அந்த வகையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவண்ட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய உதயநிதி, ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழகத்தின் 3 ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக தெரிவித்தார்.

67

மேலும் சென்னை சத்யம் திரையரங்கில் மொத்தமுள்ள 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில் ஆர்.ஆர்.ஆர் திரையிடப்படும் என ராஜமவுலியிடம் உறுதி அளித்திருந்தார் உதயநிதி. அவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியதோடு, அஜித் ரசிகர்களையும் காண்டாக்கி உள்ளது.

77

ஏனெனில்,  ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் அஜித்தின் வலிமை படம் ரிலீசாக உள்ளது. அப்படி இருக்கையில், ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்கள் ஒதுக்கினால், மீதமுள்ள ஒரே ஒரு ஸ்கிரீனில் தான் வலிமை படத்தை திரையிடுவீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

click me!

Recommended Stories