Trisha and Parthiban daughter Keerthana photo : பார்த்திபனுடனான மோதலுக்குப் பிறகு, அவரது மகள் கீர்த்தனாவுடன் நடிகை த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஒரு விருது விழாவில் த்ரிஷாவின் 'குந்தவை' கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. த்ரிஷா இதற்குப் பதிலடி கொடுக்க, பார்த்திபன் மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி (Eka Lakhani) திருமணத்தில், த்ரிஷா மற்றும் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் நடந்த இந்த பிரம்மாண்ட திருமணத்தில் மணிரத்னம், த்ரிஷா, சித்தார்த் எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அங்கு பார்த்திபனின் மகள் கீர்த்தனாவும் இருந்த நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். த்ரிஷாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "The Gen Z's and I" எனப் பதிவிட்டு இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
35
3. ரசிகர்கள் நிம்மதி
பார்த்திபனுக்கும் த்ரிஷாவுக்கும் இடையே முட்டிக்கொண்ட நிலையில், அவரது மகளுடன் த்ரிஷா சகஜமாகப் பழகுவதைப் பார்த்த ரசிகர்கள், "பஞ்சாயத்து மொத்தமா முடிஞ்சு போலயே!" என நிம்மதியடைந்துள்ளனர். தந்தை செய்த தவறுக்காக மகளிடம் த்ரிஷா பாகுபாடு காட்டவில்லை என அவரது பெருந்தன்மையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மணிரத்தினம் படத்தில் எப்படியாவது ஒரு படத்தில் ஆவது திரிஷா கமிட் ஆகிவிடுவார் அந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது. பார்த்திபன் மகளுடன் திரிஷா: கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா.பார்த்திபன் மற்றும் திரிஷாவின் இடையேயான சர்ச்சைக்கு பிறகு பார்த்திபன் மகள் த்ரிஷாவுடன் மும்பையில் இணைந்து எடுத்த போட்டோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
55
5. த்ரிஷாவின் கருப்பு:
இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சூர்யாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படமான கருப்பு படம் தான். இந்த படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகி வருகிறார் த்ரிஷா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.