பேங்க் ஆபிஸர் டூ பான் இந்தியா டைரக்டர்... லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Mar 14, 2026, 02:30 PM IST

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

PREV
16
Lokesh Kanagaraj Net worth

கோவையில் இருந்து கோலிவுட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் லோகேஷ் கனகராஜ். இவர் கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேந்தவர். கோவையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அங்கேயே ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணமே கமல்ஹாசன் தான். அவரின் வெறிகொண்ட ரசிகனான லோகி, ஒரு படம் மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவாராம். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்ததும் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே குறும்படங்களை இயக்கி வந்துள்ளார் லோகேஷ்.

26
லோகேஷ் கனகராஜ் திரைப்பயணம்

அப்படி அவர் இயக்கிய குறும்படம் ஒன்றைப் பார்த்த கார்த்திக் சுப்புராஜ், அதை தனது அவியல் என்கிற ஆந்தாலஜி படத்தில் வெளியிட்டார். அதற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தன்னிடம் இருந்த மாநகரம் படத்தின் கதையை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் சொல்லி ஓகே வாங்கிய லோகி, அப்படத்தை கில்லி மாதிரி சொல்லி அடித்தார். அப்படம் ரிலீஸ் ஆனபோது, யார்ரா இந்த டைரக்டர் இவ்வளவு சூப்பரா எடுத்திருக்கான் என்று தான் பலரும் சொன்னார்கள். அதன்மூலம் வெளிச்சம் கிடைத்ததும் அடுத்த படமே கார்த்தியை வைத்து இயக்கினார் லோகி.

36
லோகேஷின் மாஸ்டர் பீஸ் படங்கள்

தமிழ் சினிமாவில் பாடல் இல்லாத படங்களை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று ஒரு பிம்பம் இருந்தது. அதையெல்லாம் தகர்த்தெறிந்தது கைதி. அப்படத்தின் ஸ்கிரீன்பிளே ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து ரசிக்க வைத்தது. கைதி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதும் அடுத்த படமே விஜய்யின் மாஸ்டர். இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஜோனுக்குள் நுழைந்த லோகி, அதிலும் தன்னோட மேஜிக்கை காட்டி, மாஸ்டர் படத்தை மாஸ்டர் பீஸாக மாற்றினார். அப்படம் லோகேஷின் கெரியரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திச் சென்றது.

46
தரமான கம்பேக் கொடுத்த லோகேஷ்

மாஸ்டர் வெற்றிக்கு பின் லோகேஷின் ஆஸ்தான குருவான கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் தன் வசம் இருந்த ஒரு ஒன்லைனை சொல்ல, அதை ஒரு பக்கா மாஸ் ஆக்‌ஷன் ஸ்கிரிப்டாக செதுக்கி தன்னுடைய தலைவனை திரையில் கொண்டாடி இருந்தார் லோகி. அப்படத்தின் மூலம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸை உருவாக்கி, ஒட்டுமொத்த் இந்திய திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்து, பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது விக்ரம் திரைப்படம். கமல்ஹாசனுக்கும் இது தரமான கம்பேக் படமாக அமைந்திருந்தது.

56
ஹீரோவான லோகேஷ்

பின்னர் அடுத்தடுத்த படங்களில் விஜய், ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா அளவில் பட்டையை கிளப்பியது. இப்படி டைரக்டராக கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது டிசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இதுதவிர தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்தும் ஒரு படத்தை இயக்க கமிட்டாகி உள்ளார். மேலும் கைதி 2, விக்ரம் 2 உள்ளிட்ட படங்களும் லோகேஷ் கனகராஜின் லைன் அப்பில் உள்ளது.

66
லோகேஷின் சொத்து மதிப்பு

இந்த நிலையில், அவர் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது அவர் ஒரு படத்தை இயக்க ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் ஹீரோவாக நடிக்க உள்ள படத்துக்கு அவருக்கு ரூ.30 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். இவரிடம் லெக்சஸ், பிஎம்டபிஸ்யூ போன்ற விலையுயர்ந்த கார்களும் அவரிடம் உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories