நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகன்கள், மகள் மற்றும் மனைவியோடு ஃபாரின் ட்ரிப் சென்றிருக்கிறார். அங்கு ஃபேமிலியோடு அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் கடைசியாக பராசக்தி திரைப்படம் வெளியானது. அப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்தது. இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படம் என்கிற பெருமையையும் இதுவரை அப்படம் தக்கவைத்து உள்ளது. அப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். அப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான அப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதில் செழியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவா.
24
சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தயாரிப்பாளராகவும் ஒரு வெற்றிக்கனியை ருசித்திருக்கிறார் எஸ்.கே. அவர் தயாரிப்பில் கடந்த மாத இறுதியில் தாய் கிழவி என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தை சிவக்குமார் முருகேசன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி இருந்தார். தாய் கிழவி திரைப்படம் சுமார் 60 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. தாய் கிழவி திரைப்படம் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. அப்படம் அவருக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.
34
சேயோன் ஷூட்டிங் தள்ளிவைப்பு
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் என்கிற திரைப்படம் உருவாக உள்ளது. தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் தான் சேயோன் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை இம்மாதம் தொடங்க இருந்த இருந்தனர். ஆனால் தாய் கிழவி படம் தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு வருவதால், சேயோன் பட ஷூட்டிங்கை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்து உள்ளனர். இதனிடையே கிடைத்துள்ள கேப்பில் வெளிநாட்டுக்கு தன்னுடைய ஃபேமிலியோடு சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
அதன்படி அவர் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன்கள் குகன் தாஸ் மற்றும் பவன் தாஸ் உடன் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். அவர் பவன் தாஸோடு செல்லும் முதல் வெளிநாட்டு ட்ரிப் இதுவாகும். அங்கு சென்றதும் அங்குள்ள புகழ்பெற்ற யுனிவர்சல் ஸ்டூடியோஸ் என்கிற உலகப் புகழ்பெற்ற தீம் பார்கிற்கு தன்னுடைய மகன்களையும் மகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயனின் ஃபாரின் ட்ரிப் போட்டோஸுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.