தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவரது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை விஜய் ரசிகர்களும் தடபுடலாக கொண்டாடினர். அதுமட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளுக்கு அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்தனர். குறிப்பாக விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தாலும் இவர்களைக் காட்டிலும் லேட்டாக வாழ்த்து சொன்னாலும் தன் பதிவு மூலம் சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பி இருக்கிறார் நடிகை திரிஷா.
24
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரிஷா
அந்த வகையில் நேற்று இரவு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து திரிஷா ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் சோஃபாவில் விஜய் அருகே திரிஷா அமர்ந்திருக்கிறார். அப்போது திரிஷா வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியான இஸ்ஸியை கையில் தூக்கி கொஞ்சியபடி இருக்கிறார் விஜய். இஸ்ஸியை தன்னுடைய குழந்தை போல் வளர்த்து வருகிறார் திரிஷா. அந்த நாய்க்குட்டிக்காக ஒரு இன்ஸ்டா பக்கத்தையும் வைத்திருக்கும் அவர், அதில் இஸ்ஸியின் தாய் நான் தான் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், Happy Birthday Bestest என குறிப்பிட்டுள்ளார் திரிஷா. அவரின் இந்த பதிவு தான் தற்போது செம வைரலாகி வருகிறது.
34
தொடர் சர்ச்சையில் சிக்கும் விஜய் - திரிஷா
நடிகர் விஜய் பிறந்தநாளன்று வாழ்த்து தெரிவித்து நடிகை திரிஷா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து திரிஷா வெளியிட்ட புகைப்படத்தில் இருவரும் லிஃப்டில் ஒன்றாக செல்பி எடுத்திருந்தனர். அப்போது இருவரும் சொகுசு கப்பலில் சென்றபோது எடுத்த புகைப்படம் அது என நெட்டிசன்கள் டீகோடு செய்தனர். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் விஜய்யும், திரிஷாவும் காதலிக்கிறார்கள் என்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து புயலை கிளப்பினர். விஜய்யுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ஆனால் அவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனதால் அவரைப்பற்றிய கிசுகிசுக்கள் சற்று ஓய்ந்துள்ளன.
விஜய் - திரிஷா பற்றி பல்வேறு சர்ச்சைகள் உலா வந்தாலும் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே பழகி வருகிறார்கள். விஜய்யுடன் நடிகை திரிஷா, கில்லி, திருப்பாச்சி, குருவி, லியோ, வாரிசு போன்ற படங்களில் நடித்திருந்தார். திரையில் இவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரியும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இதனால் இந்த ஜோடிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவைத் தாண்டி ரியல் லைஃபிலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. இருவரும் நட்புடன் பழகுவதை கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு கும்பல் சுற்றி வருவதாக விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில வருடங்களாக விஜய்யின் பட விழாக்களில் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்வதில்லை. இதன் காரணமாக தான் விஜய் - திரிஷா பற்றிய கிசுகிசுக்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து பரவி வருவது குறிப்பிடத்தக்கது.