லீக் ஆன டாக்ஸிக் பட கதை... யஷ் வெளியிட்ட திடீர் அப்டேட்டால் திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்...!

Published : Feb 19, 2026, 12:15 PM IST

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
14
Toxic Movie Teaser Release Date

கேஜிஎஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் யஷ் ஒரு கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 20ந் தேதி காலை 9.35 மணிக்கு டாக்ஸிக் திரைப்படத்தின் டீசன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

24
'டாக்ஸிக்' படத்தின் கதை என்ன?

ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் கதை கசிந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தப் படத்தை விநியோகிக்கும் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் படத்தின் கதை விவரங்கள் வெளியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் காலனித்துவ ஆட்சி பலவீனமடைந்து, குற்ற கும்பல்களின் ஆதிக்கம் வலுப்பெற்றது. வெளி உலகிற்கு சொர்க்கமாகத் தெரிந்த கோவாவின் நிழல் உலகம், இருள் சூழ்ந்ததாக இருந்தது. இந்தச் சூழலில், ஒரு இளைஞன் ரத்தம், பயம் மற்றும் துரோகத்தின் மூலம் தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கிய விறுவிறுப்பான கதையே இந்த டாக்ஸிக் என்று தெரியவந்துள்ளது.

34
பிரம்மாண்டமாக உருவாகும் டாக்ஸிக்

'அதிகாரம் என்பது கொடுக்கப்படுவதில்லை, அது வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகிறது. அவ்வாறு பெற்ற அதிகாரத்திற்கு ஒரு விலை உண்டு. கடத்தல் பாதையே இங்கு போர்க்களம். விசுவாசத்திற்குப் பதிலாக சந்தேகம் மட்டுமே இங்கு நிலைத்திருக்கும். பிழைத்தவன் மட்டுமே இவற்றின் மத்தியில் வாழ முடியும்' போன்ற கதை விவரங்களும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. டாக்ஸிக் திரைப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தான் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனையும் தயாரித்துள்ளது.

44
ரிலீசுக்கு ரெடியான டாக்ஸிக்

'டாக்ஸிக்' திரைப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் இடம்பெற்றுள்ளனர். அனைவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா என ஐந்து பேர் இந்தப் படத்தில் இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மார்ச் 19ந் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி இருக்கிறார். இப்படம் யஷுக்கு மற்றுமொரு 1000 கோடி வசூல் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories