Abishan Jeevind Marries His Longtime Girlfriend: 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய நீண்ட நாள் காதலியான அகிலாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 5 வருடங்களில் மட்டும் தமிழ் சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் அறிமுகமாகி உள்ளனர். இவர்களில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் இயக்கி, முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்பவர்கள் ஒரு சிலரே.... அந்த வகையில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்துக்கு முக்கிய இடம் உண்டு.
26
கதைக்களம்:
இந்த படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, ஹீரோயினாக சிம்ரன் நடித்திருந்தார். இலங்கையை சேர்ந்த சசிகுமார் மற்றும் சிம்ரன், வாழ்வாதாரத்தை தேடி இரண்டு ஆண் குழந்தைகளுடன் சென்னைக்கு வருகிறார்கள். சிம்ரனின் அண்ணனாக நடித்துள்ள யோகி பாபு, இவர்களுக்கு புதிய வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து... அவர்கள் தமிழகத்தில் வசிக்க தேவையான ஆதாரங்களை போலியாக தயார் செய்து கொடுக்கிறார்.
36
உணர்வு பூர்வமான கதைக்களம்:
இவர்கள் தீவிரவாதிகளாக இருக்க கூடும் என போலீசாருக்கு தகவல் கிடைக்க, சசிகுமார் குடும்பத்தை வலைபோட்டு தேட, பின்னர் என்ன நடக்கிறது? இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறதா? இவர்களை அவர்கள் வாழும் காலனியில் இருக்கும் மற்றவர்கள் காட்டி கொடுக்கிறார்களா? இந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை... லாஜிக் மீறிய கருத்துடன் உணர்வு பூர்வமாக கூறி இருந்தார் அபிஷன்.
46
அபிஷன் திருமணம் நடந்து முடிந்தது:
இந்த திரைப்படம் சுமார் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.80 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டிலேயே காதலிக்கு கல்யாணம் குறித்த புரபோசலை கூறிய அபிஷன், அக்டோபர் 31-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டிருந்தார். அவர் சொன்னது போலவே, இன்று அகிலா மற்றும் அபிஷன் திருமணம் பிரமாண்டமாக பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்துள்ளது.
56
BMW கார் பரிசு:
இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அபிஷன் திருமணத்திற்காக, 'டூரிஸ்ட் ஃபேமிலி ' பட தயாரிப்பாளர் MRP Entertainment தலைவர் மகேஷ் ராஜ் பசிலியான் ரூ.1 கோடி மதிப்புள்ள BMW காரை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, அபிஷனின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
66
ஹீரோவாக நடிக்கும் அபிஷன்:
'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில், ஒரு சிறு ரோலில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த அபிஷன், தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து வரும் படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.