சினிமா கைவிட்டாலும்; பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் பிரசாந்த் - இத்தனை கோடிக்கு அதிபதியா?
டாப் ஸ்டார் பிரஷாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாப் ஸ்டார் பிரஷாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வந்தவர் தியாகராஜன். அவரின் ஒரே மகனான பிரஷாந்த், தந்தையை போலவே, அரும்பு மீசை அழகோடு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' படம் தான் பிரசாந்த் ஹீரோவாக நடித்த முதல் படம். முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய பிரசாந்துக்கு ரசிகைகள் கூட்டம் அதிகரித்தது. இதனால் அடுத்தடுத்து லவ் சப்ஜெக்ட் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்தார்.
விஜய், அஜித்தை மிஞ்சிய பிரஷாந்த்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிரஷாந்தை ஹீரோவாக நடிக்க வைக்க கடும் போட்டி நடந்தது. இருப்பினும் தமிழிலேயே அதிக கவனம் செலுத்திய பிரசாந்த், திருடா திருடா, ஆணழகன், செம்பருத்தி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து 1990களில் டிரெண்டிங் ஹீரோவாக வலம் வந்தார். குறிப்பாக இன்றைய மாஸ் நடிகர்களான அஜித் - விஜய் போன்றவர்கள், தங்களை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள போராடிய அந்த கால கட்டத்தில், அவர்களை விட பல மடங்கு சம்பளம் வாங்கியவர் பிரஷாந்த்.
பிரஷாந்துக்கு திருப்புமுனை தந்த படம் ஜீன்ஸ்
தன்னுடைய அழகால், 90-களில் சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்த பிரஷாந்த், பல இளம் பெண் ரசிகைகளின் கனவு கண்ணனாக இருந்தார். ஆரம்பத்தில் ரொமாண்டிக் படங்களில் அதிகம் நடித்தாலும், பின்னர் ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படங்களிலும் கலக்கினார். குறிப்பாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்த 'ஜீன்ஸ்' திரைப்படம் அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகும்.
இதையும் படியுங்கள்... Andhagan Review : மீண்டும் டாப் ஸ்டாராக கம்பேக் கொடுத்தாரா பிரசாந்த்? அந்தகன் படத்தின் விமர்சனம் இதோ
திருமண வாழ்க்கையால் பிரஷாந்துக்கு சறுக்கல்
இதைத் தவிர, ஜோடி, சாக்லேட், ஸ்டார், மஜ்னு, குட்லக், வின்னர், பிரியாத வரம் வேண்டும் என இவர் நடித்த பல படங்கள் தற்போது கே டிவியில் போட்டால் கூட அதற்கு நல்ல மவுசு இருக்கும். விஜய் - அஜித்துக்கு நிகராக திரையுலகில் ஜொலிக்க வேண்டிய பிரஷாந்த், திருமணத்திற்கு பின்னர் கடும் சரிவை சந்தித்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், திருமணமான ஓராண்டிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் பிரசாந்த். இது பிரஷாந்தின் சினிமா கெரியரையும் அதிகம் பாதித்தது.
பிரஷாந்தின் அடுத்த படம்
மீண்டும் தன்னுடைய கெரியரை தூக்கி நிறுத்த பல வருடங்களாக போராடிய பிரஷாந்த் கடந்த ஆண்டு தான் கம்பேக் கொடுத்தார். அவர் ஹீரோவாக நடித்த 'அந்தகண்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர, தளபதி விஜய்யுடன் சேர்ந்து அவர் நடித்த GOAT படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி ஹிட் அடித்தது. அடுத்ததாக நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார். பிரஷாந்தின் தமிழ் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹரி, சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
பிரஷாந்த் பிறந்தநாள்
இந்நிலையில் நடிகர் பிரஷாந்த் இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரஷாந்துக்கு சினிமாவில் பெரியளவில் படவாய்ப்பு இல்லாவிட்டாலும்... அவர் மாதம் தோறும் கோடிகளில் சம்பாதித்து வருகிறார். அது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்... பிரஷாந்த் முன்னணி நடிகராக இருக்கும் போதே, சென்னையின் ஹாட்ஸ்பாட்டாக திகழும் தி.நகரில் ஒரு இடத்தை வாங்கி போட்டிருந்தார்.
பிரஷாந்த் சொத்து மதிப்பு
தற்போது அந்த இடத்தில் பிரசாந்த் கோல்டு டவர் என்கிற பெயரில் 17 மாடிகள் கொண்ட பிரமாண்ட பில்டிங் ஒன்றை கட்டி அதை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் பல முன்னணி நகைக் கடை உள்பட பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது அந்த கடைகளின் வாடகையே பல லட்சம் இருக்குமாம், அதன் மூலம் மாதந்தோறும் பல கோடி பிரஷாந்துக்கு கிடைக்கிறது. இந்த இடத்தில் தான் நடிகர் பிரஷாந்தின் ஆபிஸும் இயங்கி வருகிறது. இது மட்டுமின்றி, சென்னையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள பிரஷாந்த், ஷூட்டிங் ஹவுஸ் ஒன்றையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இவரிடம் பல சொகுசு கார்களும் உள்ளன. நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... இப்படி ஒரு பெண் கிடைத்தால் போதும்.. 2-வது திருமணம் குறித்து நடிகர் பிரசாந்த் சொன்ன குட்நியூஸ்..