
வெள்ளி திரையில் கதாநாயகர்களுக்கு மவுசு அதிகம் என்றால், சின்னத்திரையை பொருத்தவரை கதாநாயகிகளுக்கு தான் மவுசு. பல ஹீரோயின்கள் ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்கு தற்போது சம்பளம் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் சீரியல் நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் பிரபல சீரியல் நடிகர் நியாஸ் கான் கொடுத்த பேட்டி ஒன்றில், ஒரு சில சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறிய தகவல், ஒட்டுமொத்த ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்தது. மேலும் அவர் குறிப்பிட்டு கூறியது, மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சுவாதி கொண்டே-வை தான் என பல ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இது குறித்து சுவாதி கொண்டே தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை. சுவாதி கொண்டே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'மூன்று முடிச்சு' தொடரில் நடிக்க, ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை ஒரு நாளைக்கு சம்பளமாக பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் டிவியில் 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் நடித்து பிரபலமானவர். அதை போல் கடந்தாண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படத்திலும் அரவிந்த்சாமியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரூ.20 டிக்கெட் முதல்; வேட்டையன் வரை! பல ஹிட் படங்களை வெளியிட்ட உதயம் அஸ்தமனம் ஆனது!
இவருக்கு அடுத்தபடியாக சம்பள விஷயத்தில் டாப்பில் இருக்கும் ஹீரோயின் நடிகை சைத்ரா ரெட்டி என கூறப்படுகிறது. சைத்ரா ரெட்டி கன்னடா சீரியல் மூலம் பிரபலமானவர். இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல் வரை' சீரியலில் பிரியா பவானி ஷங்கர் விலகிய பின்னர், கதாநாயகியாக நடித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரமிக்க வைத்தார். தற்போது 1000 எபிசோடுகளை கடந்து, சன் டிவியில் வெற்றி நடை போட்டு வரும் கயல் சீரியலில் கயல் என்கிற கதாபாத்திரமாகவே மாறி நடித்து வருகிறார். டிஆர்பிஎல் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் இந்த தொடரில் இவர் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இவரை தொடர்ந்து சம்பள விஷயத்தில் டாப்பில் இருப்பவர் நடிகை மதுமிதா தான். பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமான இவரை, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது 'எதிர்நீச்சல்' தொடர். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்தாண்டு முடிவுக்கு வந்த இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது 'எதிர்நீச்சல் தொடர்கிறது' என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இரண்டாவது பாகத்திலும் மதுமிதா நடிக்க கமிட் ஆகி இருந்த நிலையில், பின்னர் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலின் சம்பள பிரச்சனை காரணமாக சீரியலில் இருந்து அதிரடியாக விளக்குவதாக அறிவித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்க இவருக்கு சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நடிகை 2 மாத கர்ப்பம்; பண்ணை வீட்டில் கிலோ கணக்கில் தங்கத்தால் அலங்காரம் செய்த நடிகர்?
அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள் லிஸ்டில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா
மற்றும் ஸ்ருதி ராஜ் அடுத்த இடத்தில உள்ளனர் மூத்த நடிகைகளான இவர்கள் இருவருமே, தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியல்களில் அதிகம் நடித்து வருகின்றனர். இவர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ.35 முதல் ரூ.40 வாங்குவதாக கூறப்படுகிறது.
இவரைத் தொடர்ந்து சிங்க பெண்ணே சீரியல் நடிகை மனிஷா மகேஷ் மற்றும் மருமகள் சீரியல் நடிகை கேப்ரில்லா இருவருமே, தாங்கள் கதாநாயகியாக நடிக்கும் ஒரு எபிசோடுக்கு ரூ 30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் டாவ்ப்பில் சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் இவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: இந்த தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக நடிகைகள் தெரிவித்த அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5,000 சம்பளத்தில் தொடங்கி; இன்று 6 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் பட நடிகை யார் தெரியுமா?