இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கதில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், 237.05 வசூல் செய்து, வெற்றிப்படம் என பெயர் எடுத்த போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. அதே போல் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
Image: Official film poster
ராக்கெட்டெரி:
நடிகர் மாதவன் நடித்து, எழுதி, இயக்கிய திரைப்படம் Rocketry: The Nambi Effect. இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரான ஒரு இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். இந்த திரைப்படம் சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், 40 முதல் 45 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
லைகர்:
இயக்குனர் பூரி ஜெகன் நாதன் இயக்கத்தில், கரண் ஜோகர், சார்மி, மற்றும் இயக்குனர் பூரி ஜெகன் நாதன் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருந்த திரைப்படம் லைகர். இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்... சுமார் 90 முதல் 110 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், வெறும் 60 கோடி மட்டுமே வசூல் செய்து, படு தோல்வியை சந்தித்தது.
கோப்ரா:
நடிகர் விக்ரமை வைத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய மிக பிரமாண்டமான திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தை எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, கனிஹா, மிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் மிரட்டிய இந்த படம் 40 கோடி மட்டுமே வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸிலும், விமர்சன ரீதியாகவும் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி! அய்யோ வேண்டாம் பதறிய சிலர்? தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் செய்த சேட்டை!
பிரின்ஸ்:
தொடர்ந்து தரமான படங்களையும், வித்தியாசமான படங்களையும் கொடுக்க விரும்பும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம், சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், 35 முதல் 40 கோடி வரை வசூலித்து படு தோல்வியை சந்தித்தது. காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்டாலும், பல இடங்களில் காமெடி என்கிற பெயரில் சிரிப்பே வராமல் காமெடி செய்து, ரசிகர்களை படுப்பாக்கினார் இயக்குனர் என, பல நெகடிவ் கமெண்ட்ஸ் வெளியானதே... இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிபிடித்தக்கது.