கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியாவை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!

Published : Dec 16, 2025, 05:07 PM IST

Top 6 Most Talked and Trending Actresses in Tamil Cinema in 2025 : 2025ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டு சோஷியல் மீடியாவை கதி கலங்க வைத்த டாப் 5 நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாம்.

PREV
19
Top 6 Most Talked and Trending Actresses in Tamil Cinema in 2025

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் 2025ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொஞ்சம் கம்மி தான். ரஜினிகாந்த் மற்றும் அஜித் படங்கள் தவிர மாஸ் நட்சத்திரங்களின் படங்கள் பெரியளவில் ரிலீஸ் ஆகவில்லை. அப்படியே ரிலீசாகியிருந்தாலும் ஒர்க் அவுட்டாகவில்லை. ஆனால், இதற்கு மாறாக ஹீரோயின்களின் வரவு அதிகமாகவே இருந்தது என்றே சொல்லலாம். அதற்கு சிறந்த உதாரணம் கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன். இருவரும் ஒரே படத்திலேயே புதிய உச்சம் தொட்டனர்.

29
2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் அதிகளவில் பேசப்பட்டு சோஷியல் மீடியாவையே கதி கலங்க வைத்த டாப் 5 நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம். இந்த டாப் 5 நடிகைகள் தான் இப்போது டிரெண்டிங்கில் இருக்கின்றனர். தற்போது புதிய தலைமுறையினர் ஆன இவர்கள் நடிப்பில் ஆர்வம் உடையவராகவும் தற்போது 2கே கிட்ஸ் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றனர். 

39
Viral Actresses Social Media

ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு தனிச்சிறப்பும் அழகும் உடையவராக உள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நடிகையும் இதில் இடம்பெறவில்லை என்பது தான் சற்று வேதனை அளிக்கிறது. அதோடு மனதிற்கு பிடித்த நடிகைகள் இடம் பெற்றிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

49
1.கயாடு லோஹர்

அசாமை சேர்ந்த இவர் தற்போது டிராகன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு பெரிய இடத்தை தக்க வைத்துள்ளார். இவர் நடிப்பு திறமையாலும் இவருடைய அழகும் இவருக்கு வெற்றிப்படமாகவே அமைத்து தந்தது. படத்திலேயே கிடுகிடுவென உயர்ந்த இவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளார். சிம்புவிற்கு ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

59
2. கீர்த்தி ஷெட்டி:

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. நாக சைதன்யா நடித்து வெளியான கஸ்டடி படம் மூலமாக தமிழ் படத்தில் நடித்தார். ஆனால் நேரடியாக எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இப்போது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் 5ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் வெளியாகவில்லை. பிறகு 12 ஆம் தேதி வெளியாக இருந்தது. அப்போதும் வெளியாகவில்லை. ரிலீஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தப் படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் LIK படத்தில் நடித்துள்ளார். இதே போன்று ரவி மோகனின் ஜெனீ படத்திலும் நடித்துள்ளார்.

69
3.மமிதா பைஜூ:

மமிதா பைஜூ தென்னிந்திய படமான பிரேம லு படம் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்தவர். இவருடைய அழகும் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் முதல் முறையாக நடித்த படம் ரஃபேல் அது மட்டுமல்லாமல் விஜய்யின் ஜனநாயக படத்தில் நடித்துள்ளார். சூர்யா 46 படத்தில் நடிக்கிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான டியூட் படம் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட்டோ ஹிட். அப்புறம் என்ன சொல்லவா வேணும். இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பேவரைட் நடிகையும் கூட.

79
4. அனுபமா பரமேஸ்வரன்:

இவரோட நடிப்பு தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது என்றே கூறலாம். இங்கே ஒரு அழகான ஹீரோயினியாகவே தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். ரசிகர்கள் மனதில் இவர் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது வெளிவந்தது பைசன் திரைப்படம். இதில் விக்ரமின் மகன் துருவிற்கு ஹீரோயினியாக நடித்திருப்பார் இவருடைய அழகும் எதார்த்தமான நடிப்பும் இவருக்கு பெரும் வெற்றியை தந்துள்ளது. இதே போன்று டிராகன் படம் இவருக்கு புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது.

89
5. ஸ்ரீ லீலா:

தற்போது ட்ரெண்டிங் உள்ளவர் இவர்தான். ஸ்ரீ லிலா இவர் தெலுங்கு திரை உலகில் இருந்து தமிழ் சினிமாவில் அடியெடித்து வைத்துள்ளார். முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்குரா இயக்கத்தில் வெளிவர உள்ள பராசக்தி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக நடித்து தற்போது பெரிய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது பராசக்தி படத்திலிருந்து அடி அலையே என்னும் பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளதே என்று கூறலாம் இவர் ஆடும் நடனம் மிக அழகாக இருப்பதால் அனைவராலும் ரீல் செய்யப்படுகிறது.

99
6. த்ரிஷா

திரிஷா தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஹீரோயினுக்கான கதையை மையப்படுத்திய படத்தில் நடித்து தோல்வியை தழுவினார். நீண்ட நாட்களாக சினிமா பக்கம் இல்லை. பொன்னியின் செல்வன் தான் இவரை அழகாக காட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தக்லைஃப், விடாமுயற்சி, மற்றும் குட் பேடு அக்லீ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் குட் பேட் அக்லீயைத் தவிர மற்ற படங்கள் தோல்வியை தழுவினாலும் இவரது நடிப்பு டாப்பில் உள்ளது என்றே கூறலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories