சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ள பராசக்தி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து படிபடிப்படியாக முன்னேறி, கோலிவுட்டுக்குள் நுழைந்து அடுத்தடுத்த உயரங்களை தொட்டிருக்கிறார் எஸ்.கே. அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய், ரஜினி, அஜித், கமல் படங்களுக்கு நிகராக சிவகார்த்திகேயன் படங்களின் பிசினஸும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறதாம்.
24
பராசக்தி ஓடிடி டீலிங் முடிந்தது
பராசக்தி திரைப்படம் ஜனவரி 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகும் இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது. அந்நிறுவனம் ரூ.53 கோடிக்கு பராசக்தி பட ஓடிடி உரிமையை வாங்கி உள்ளதாம். சிவகார்த்திகேயனின் கெரியரில் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான படம் என்றால் அது பராசக்தி தான். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு கன்பார்ம் ஹிட் கொடுக்கும் என்பதால் அதனை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்களாம்.
34
பராசக்தி டீம்
பராசக்தி சிவகார்த்திகேயனின் 25-வது படமாகும். இந்த மைல்கல் திரைப்படத்தை சுதா கொங்கரா தான் இயக்கி இருக்கிறார். இப்படம் மொழிப் போர் தொடர்பான கதைக்களத்துடன் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார் ஸ்ரீலீலா. இப்படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பராசக்தி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார். இது அவருக்கு மிகவும் ஸ்பெஷலான படமாகும். ஏனெனில் இது அவர் இசையில் வெளிவரும் 100வது திரைப்படமாகும். இதுவரை வெளிவந்த இப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பராசக்தி திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் இப்படம் பொங்கல் ரேஸில் ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.