5 Most Profitable Low Budget Tamil Films of 2025: 2025-ஆம் ஆண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில், குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மெகா ஹிட் அடித்த சில திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. பெரிய நட்சத்திரங்களின் பிரம்மாண்டமான திரைப்படங்கள் ஒருபுறம் இருந்தாலும், சில படங்களின் வெற்றி, ஒரு தரமான கதைக்கு பட்ஜெட் ஒரு தடையே அல்ல என்பதை மீண்டும் நிரூபித்திருந்தது. நட்சத்திர அந்தஸ்து இல்லாமலும், மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, திரையரங்குகளில் வசூலைக் குவித்து தயாரிப்பாளர்களுக்கு அதிகம் லாபம் ஈட்டிய டாப் 5 தமிழ்ப் படங்களின் முழு விவரங்களை பார்ப்போம்.
26
டூரிஸ்ட் ஃபேமிலி:
ரூபாய் 7 கோடி முதல் 8 கோடி செலவில் உருவாகி ரூபாய் 90 கோடி வரை லாபம் ஈட்டிய திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம், 2025-ன் மிக அதிக லாபம் ஈட்டிய படமாக மாறியது. தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை மிகவும் யதார்த்தமான நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் டிராமாவாக இப்படம் பேசியது. எளிய மற்றும் மனதிற்கு நெருக்கமான கதைக்களம் குடும்பப் பார்வையாளர்களைக் கவர்ந்து.
36
தலைவன் தலைவி:
ரூபாய் 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி சுருட்டியது. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய இந்த அரசியல் கலந்த காதல் மற்றும் குடும்ப நாடகம், வெளியாவதற்கு முன் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை. எனினும், படத்தின் வலுவான வசனங்கள், அழுத்தமான குடும்ப உணர்வுகள் மற்றும் நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு ஆகியவை திரையரங்குகளில் பெரிய வரவேற்பைப் பெற காரணமாக அமைந்தது. ஒரு மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்தது.
46
டிராகன்:
ரூபாய் 35 கோடி முதல் 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூபாய் 150 கோடி கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது இப்படம். பிரதீப் ரங்கநாதன், கௌதம் வாசுதேவ் மேனன் நடித்த, இந்த க்ரைம் காமெடி டிராமா, இளைஞர்களின் பல்ஸ் அறிந்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் நிதி மோசடி மற்றும் தனிப்பட்ட உறவுச் சிக்கல்களைப் புதிய கோணத்தில் காட்டியது. பட்ஜெட் அளவில் இது மற்ற படங்களைவிட சற்றுக் கூடுதலானாலும், அதன் அபாரமான வசூல் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைப் பெற்றுத்தந்து.
56
குடும்பாஸ்தன்:
ரூபாய் 8 கோடி முதல் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்.. ரூபாய் 30 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. எதார்த்த நாயகனாக ரசிகர்களால் அறியப்படும் மணிகண்டன் நடிப்பில் வெளியான இந்தப் படம், நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள், வேலை இழப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகள் குறித்த உணர்ச்சிபூர்வமான நாடகமாக அமைந்தது. நட்சத்திர அந்தஸ்தை நம்பாமல், கதையின் வலிமையையும், யதார்த்தமான பாத்திரப் படைப்பையும் மட்டுமே நம்பி களமிறங்கிய இப்படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, திரையரங்குகளில் வசூலை ஈட்டி லாபம் பார்த்தது.
66
மாமன்:
ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்தது. கிராமப்புறப் பின்னணியில் உருவான இந்த எமோஷனல் டிராமா, தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டிருந்தது. கிராமத்து மனிதர்களின் உணர்வுகளை எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் சொன்ன இப்படம், நகர்ப்புற ரசிகர்களையும், கிராமப்புற ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவர்ந்தது. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, திரையரங்குகளில் லாபத்தை அள்ளியதன் மூலம், உள்ளூர் மண் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்தது.