அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?

Published : Dec 16, 2025, 06:42 PM IST

Top 5 Directors 2025 Trending in Tamil Cinema : 2025 ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்த வகையில், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து, தங்கள் திரைப்படங்களின் மூலம் அதிகளவில் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் பார்க்கலாம்.

PREV
15
1. லோகேஷ் கனகராஜ்:

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு ஒரு அதிரடி கதை காலத்தை உருவாக்கும் இயக்குனர். இவரது படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே இன்று வரை தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஃபேன் இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கப்பட்ட எல் சி யு Lokesh Cinematic Universe (LCU) படமான கைதி ,விக்ரம் ,லியோ படங்கள் பேன் இந்திய அளவில் வெற்றிகரமானது . 2025ல் லோகேஷ் கனகராஜ் எடுத்த படம் தான் கூலி. ரஜினி நடிப்பில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய அதிரடி கதைக்களமான கூலி ஒரு பக்கம் இருந்தாலும் எல் சி யு படங்கள் போதை பொருளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தற்போது நடந்து வரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகவே ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது. இந்தியாவில் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

25
2. வெற்றிமாறன்:

கடந்த ஆண்டு-ல் இவர் இயக்கிய விடுதலை 2 போட்டியில் வெறும் பின்னடைவை சந்தித்தது. முதல் பாகம் கொடுத்த வரவேற்பை 2ஆவது பாகம் கொடுக்கவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி விடுதலை 2 தோல்வியை எதிர்கொண்டது. இப்போது வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் அரசன் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து வெற்றிமாறன் மற்றும் சிம்பு பற்றிய பேச்சு தான் நாள்தோறும் அடிபடுகிறது. கோவில்பட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுவரையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்களில் ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்தன.

35
3. சித்தார்த் ஆனந்த்

சித்தார்த் ஆனந்த் இயக்கிய திரைப்படம் பார்த்தால் ஷாருக்கானின் நடிப்பில் திரைக்கு வந்த பதான் படம் தான். ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் படமாக அமைந்தது.

45
4. ராஜ்குமார் பெரியசாமி:

சிவகார்த்திகேயனுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய அமரன் படம் இவரது இயக்கத்தில் வெளியானது தான். இந்தப் படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகவில் டிரெண்டானது. இந்தப் படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இந்த அமரன் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாறு. இந்த படம் வணிக ரீதியாக அதிக வசூலை பெற்று வெற்றி படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை கமலஹாசன் தயாரித்து உள்ளார்.

55
5. எஸ் எஸ் ராஜமௌலி:

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் எஸ் எஸ் ராஜமௌலி. பாகுபலி, பாகுபலி 2, ஆர் ஆர் ஆர் என்று பிரம்மாண்ட படங்களை கொடுத்தவர். இப்போது மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தை இயக்கி வருகிறார். சமீப காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட இயக்குநர்களில் ராஜமௌலியும் ஒருவர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories