Nattamai Actress Rani Daughter Tharnika : நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த நடிகை ராணியின் மகள் தான் இப்போது கொம்புசீவி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
Actress Rani Daughter Entry, Nattamai Actress Rani Family
தமிழ் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கே பெரும் இழப்பு என்று ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் அவரது சாதனைகளை தொடர்ந்து செய்ய இப்போது அவரது மகன் சண்முகப்பாண்டியனும் களத்தில் குதித்துள்ளார். ரசிகர்களால் இளைய கேப்டன் என கூறப்படும் சண்முக பாண்டியன் தற்போது கொம்பு சீவி என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சரத்குமார், தார்ணிகா, காளி வெங்கட் ஆகியோர் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மாமா -மச்சான் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
24
Tharnika Debut Movie News
கடந்த 1991 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்திருந்தனர். இப்போது கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பிறகு விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுடன் இணைந்து சரத்குமார் நடித்துள்ளார். இது விஜயகாந்த் மீதான அன்பை வெளிப்படுத்துவதோடு இருவருக்குமான நட்பின் அடையாளமாகவும் இது பார்க்கப்படுகிறது.
34
Nattamai Actress Rani Daughter Tharnika
கொம்புசீவி படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார். இந்த படத்தை முகேஷ் டீ செல்லையா தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் 19ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கும் முன்னதாக பலரது கவனம் ஈர்த்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்றால், இந்த படத்தில் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ராணியின் மகள் கதாநாயகியாக நடத்தியுள்ளார்.
44
நடிகை தாரணிகா: யார் இந்த தாரணிகா?
இவரது அம்மா நாட்டாமை படத்தில் டீச்சராக வருவார். அவரது மகள் தாரணிகா தான் இப்போது கொம்பு சீவி படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் சரத்குமாருடன் ஒரு சில காட்சிகளில் ராணி நடித்திருப்பார். அவரது அம்மாவைத் தொடர்ந்து இப்போது சரத்குமார், சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தில் அவரது மகள் தாரணிகா நடித்துள்ளார்.
கதைக்களம்:
நகைச்சுவை, செண்டிமெண்ட், ஆக்சன், காதல், என்ன பல அம்சங்களை கொண்ட படமாக இந்த படம் இருப்பதாக கூறப்படுகிறது இந்த படம் டிசம்பர் 19ஆம் தேதி அன்று வெளியிடப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த படத்தை ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர்.