எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!

Published : Dec 10, 2025, 05:23 PM IST

Top 3 Audience Celebrated Super Hit Movies in Tamil Cinema : அதிக விளம்பரங்கள் இன்றி தரமான கதைகள் தரமான நடிப்புகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படங்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை கிட்டத்தட்ட 700க்கும் அதிகமான படங்கள் ஆண்டுதோறும் திரைக்கு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சைலண்டாக திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று காலத்தால் கொண்டாடப்படும் சிறந்த படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

24
டூரிஸ்ட் ஃபேமிலி (tourist family):

தமிழ் சினிமாவில் சசிகுமார் சிம்ரன் ஆகியவரின் இணைப்பில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி சுமார் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கி 90 கோடிக்கு மேல் வசூலித்து இந்த படம் மிகுந்த வெற்றி படமாகவே மாறியதுஅதிகமான வருமானத்துடன் 2025 ஆம் ஆண்டின் மிகவும் லாபகரமான இந்திய திரைப்படமாக மாறியது, வலுவான வாய்மொழி மற்றும் ஒரு குடும்பத்தின் பயணத்தைப் பற்றிய ஒரு கவர்ச்சிகரமான கதை காரணமாக அதன் வெற்றியைக் கொண்டுள்ளது.அபிஷன் ஜீவிந்த் இயக்குனர். எம் பி ஆர் எண்டர்பிரைசஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது பெரும் லாபத்தை ஈட்டி உள்ளது இந்த நிறுவனம்.

34
மதகஜராஜா (mada gaja Raja):

12 வருட தாமதத்திற்குப் பிறகு வெளியான சுந்தர் சி விசால் சந்தானம் கூட்டணியில் இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது இந்த படத்திற்கு 15 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி 50 கோடிக்கு மேல் வசந்தி பெரிய வெற்றி படமாகவே மாறியது. ஜெமினி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. நகைச்சுவை மற்றும் காதல் கலந்த திரைப்படம் மிக வெற்றி படத்தை சுந்தர்சிக்கு தந்தது.

44
குடும்பஸ்தன் (kudumbastan):

மணிகண்டன் இயக்கத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் குட் நைட் லவ்வர் படங்களை போல் மீண்டும் தரமான கதைக்கு மக்களுக்கு மனதில் பிடித்த வண்ணமே இந்த படத்தை ஆதரித்து மிக வெற்றி படமாக இந்த படம் அமைந்தது. இந்த திரைப்படம் 10 கோடிக்குள் பட்ஜெட்டில் உருவாகி 25 கோடி தாண்டி நீ படம் வசூலித்து வெற்றி படத்தை தொட்டது. குடும்பத்தில் இருக்கும் கதையை அப்படியே எடுத்து ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தார் மணிகண்டன்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories