
தென்னிந்திய நடிகர்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் இந்த நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தென்னிந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் கூலி பட வில்லன் நாகார்ஜுனாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.3010 கோடி. சினிமாவை சைடு பிசினஸாக பார்த்து வரும் நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக சினிமா ஸ்டூடியோ உள்பட ஏராளமான தொழில்கள் உள்ளன. அதன்மூலம் கோடி கோடியாய் வருவாய் ஈட்டி வருகிறார்.
சிரஞ்சீவிக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.1650 கோடி ஆகும். இவரும் ஏராளமான பிசினஸ்களை செய்து வருகிறார். சினிமாவைப் போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறந்து வருகிறார் சிரஞ்சீவி.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர் ராம் சரண் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். சிரஞ்சீவியின் அவர் ரூ.1370 கோடி சொத்துக்களுக்கு அதிபதி. இவருக்கு சொந்தமாக விமான நிறுவனமே உள்ளது.
'RRR' புகழ் ஜூனியர் என்.டி.ஆரின் நிகர சொத்து மதிப்பு ரூ.571 கோடி. இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள ஜூனியர் என்.டி.ஆர் பரம்பரை பணக்காரர். இவரது தாத்தா என்.டி.ஆர் அரசியல் மற்றும் சினிமாவில் கோலோச்சி இருந்தார். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார்.
'புஷ்பா' புகழ் அல்லு அர்ஜுன் தனது நடிப்பால் மக்களின் மனதை வென்றுள்ளார். GQ அறிக்கையின்படி, அல்லு அர்ஜுன் ரூ.460 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். இவர் சொந்தமாக ஓடிடி தளம், சினிமா மல்டிபிளக்ஸ் தியேட்டர், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை வைத்திருக்கிறார்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.275 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.450 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியலில் குதித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் கமல்ஹாசனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.450 கோடி. சினிமா மட்டுமின்றி அரசியலிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், அண்மையில் தான் மாநிலங்களவை எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு சென்னையில் மட்டும் ரூ.131 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இந்தப் பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 8வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்திற்கு ரூ.150-250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மேலும், அவர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார். அவர் ரூ.430 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார். இவர் ரியல் எஸ்டேட்டில் ஏராளமான முதலீடு செய்துள்ளார்.
மகேஷ் பாபுவின் நிகர சொத்து மதிப்பு ரூ.273 கோடி. ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் மகேஷ் பாபுவுக்கு சுமார் ரூ.28 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா உள்ளது. இது தவிர, பெங்களூரு மற்றும் துபாயிலும் வீடுகளை வாங்கியுள்ளார். மேலும், அவருக்கு சொகுசு கார்கள் மீதும் அதிக ஆர்வம் உண்டு.
பாகுபலி மூலம் பான் இந்தியா நாயகனாக உருவெடுத்த நடிகர் பிரபாஸும் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளார். ஊடக அறிக்கைகளின்படி, பிரபாஸ் ரூ.241 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். இவருக்கு சொந்தமாக ஐதராபாத் மட்டுமின்றி இத்தாலி போன்ற வெளிநாடுகளிலும் வீடுகள் உள்ளன.