Top 10 Indian Actors: இந்தியாவில் டாப் 10 நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் முதலிடத்தை இழந்துள்ளார். நம்பர் 1 இடம் யாருக்கு? இந்த பட்டியலில் யார்? யார்? உள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் சினிமாவையும் மக்களையும் பிரிக்க முடியாது. தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு இணையே இல்லை. நமது நாட்டில் நடிகர்களை ஆட்சி அரியணையில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் பழக்கம் காலம் காலமாக தொடர்கிறது. என்.டி.ஆர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல் இப்போது தமிழக முதல்வராக இருக்கும் தளபதி விஜய் வரை இது தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் டாப் நடிகர்கள் குறித்து ஆர்மேக்ஸ் மீடியா (Ormax Media) என்ற நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
25
முதலிடத்தை இழந்த தளபதி விஜய்
அதாவது ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பிரபலமான நடிகர்கள் குறித்து ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் பட்டியல் கொடுத்துள்ளது. இதில், நடிகரும், தமிழக முதல்வருமான தளபதி விஜய் நான்காம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த விஜய், இப்போது 4ம் இடத்துக்கு சென்றுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஆன பிறகும் விஜய்யின் செல்வாக்கு சரிந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. விஜய் தனது கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சென்சார் சர்டிபிகேட் பிரச்சனை காரணமாக இந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
35
பிரபாஸ் முதலிடம்
'பாகுபலி' புகழ் பிரபாஸ் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். தளபதி விஜய் இடத்தை அவர் பிடித்துள்ளார். பிரபாஸுக்கு 'ஸ்பிரிட்' உட்பட பல பெரிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. அவர் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடிப்பது, இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க உதவியுள்ளது. பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில், அல்லு அர்ஜுன் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் உள்ள விஜய்க்கு அடுத்தபடியாக மகேஷ் பாபு ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
ரன்வீர் சிங் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது 'துரந்தர்' படத்தின் மாபெரும் வெற்றி, அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. ராம் சரண் ஏழாவது இடத்தில் உள்ளார். அடுத்தபடியாக சல்மான் கான் எட்டாவது இடத்தில் உள்ளார். அக்ஷய் குமார் ஒன்பதாவது இடத்தையும், ஜூனியர் என்.டி.ஆர் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, இந்தப் பட்டியல் இந்தியா முழுவதும் தென்னிந்திய நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. பான்-இந்தியன் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தென்னிந்தியப் படங்கள் மற்ற மொழி மாநிலங்களிலும் நல்ல வசூலை ஈட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
55
கடவுளின் தேசத்து திரையுலகம் இல்லை
இந்தியாவின் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் எதார்த்த படங்களை எடுக்கும் மலையாள திரையுலகில் இருந்து ஒரு நடிகர் கூட இடம்பெறவில்லை. அதாவது மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில், துல்கர் சல்மான், பிரிவிவிராஜ் என யாரும் இந்த பட்டியலில் இல்லை. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் பெரும்பாலும் பான் இந்தியா படங்களாக உலா வருகின்றன. ஆனால் மலையாள படங்கள் பான் இந்தியா அளவுக்கு செல்லாதது கடவுளின் தேசம் இந்த பட்டியலில் இல்லாததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.