Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?

Published : May 23, 2026, 12:38 PM IST

Dhanush’s Kara OTT Release : விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து தியேட்டரில் பெரியளவில் சோபிக்காமல் போன கர திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Kara OTT Release Date

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ரிலீஸ் ஆன படம் கர. இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி இருந்தார். இவர் போர் தொழில் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தின் இயக்குநர் ஆவார். போர் தொழில் படத்திற்கு பின் அவர் இயக்கும் படம் என்பதால் ரிலீஸுக்கு முன் கர படத்திற்கு ஓவர் ஹைப் இருந்தது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார்.

24
கர லைஃப்டைம் வசூல்

கர திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். ஓவர் ஹைப்போடு ரிலீஸ் ஆன இப்படம், மந்தமான திரைக்கதை காரணமாக ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. இதன் காரணமாகவே வந்த வேகத்திலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது. தனுஷின் கெரியரில் ஒரு தோல்விப் படமாக கர கருதப்படுகிறது. இப்படம் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது ஒட்டுமொத்தமாகவே உலகளவில் ரூ.53.63 கோடி வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

34
கர படத்தின் வசூல்

மொழிவாரியாக பார்த்தால் தமிழில் இப்படம் ரூ.29.57 கோடி வசூலித்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் 7.98 கோடி வசூலித்துள்ளது. கர்நாடகாவில் ரூ.3.14 கோடியும், கேரளாவில் 61 லட்சமும், இதர மாநிலங்களில் 28 லட்சமும் வசூலித்திருக்கிறது. இதன்மூலம் கர திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.43.13 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் ரூ.10.50 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தியேட்டரில் பெரியளவில் சோபிக்காத இப்படம் தற்போது ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பப்பட்டு உள்ளது.

44
கர ஓடிடி ரிலீஸ்

அதன்படி கர திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தியேட்டரில் பிளாப் ஆன கர திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.50 கோடிக்கு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories