விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த லெஜெண்ட் சரவணன், அதை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். இந்த பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தலா நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர் இயக்கத்தில் 'லெஜெண்ட் சரவணன்' நடிக்க உள்ள படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார் சரவணன்.
கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கினார்கள் படக்குழுவினர். முதல் நாளே அதிரடி காட்சிகளில் தூள் கிளப்பிய சரவணன், பின்னர் நாயகியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதே போல் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கிற்கு இது தான் கடைசி படமும் கூட .
அறிவியல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை ஊர்வசி ரௌட்டாலா ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஊர்வசி ரவுதலாவுக்கு சுமார் இரண்டு கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
அறிமுகமாகும் முதல் படத்திலேயே நயன்தாராவுக்கு சமமாக கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் இவரை கண்டு மற்ற சில நடிகைகள் வாயடைத்து போகிறார்களாம்.