ரீல் விட்டாரா தில் ராஜு? வாரிசு படம் 210 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்ல.. அடிச்சு சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம்

First Published | Jan 20, 2023, 11:30 AM IST

பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடி வருவதால் வாரிசு படம் ரூ.210 கோடி வசூலித்திருக்க 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய்யின் 66-வது படம் வாரிசு. வம்சி இயக்கிய இப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன இப்படம் வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்திற்கு ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படம் உள்ளதால் பேமிலி ஆடியன்ஸிடம் இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

வாரிசு படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் வெளியாகி 7 நாட்களில் உலகளவில் ரூ.210 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாரிசு படம் இந்த அளவுக்கு வசூலிக்க வாய்ப்பே இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்ச பணத்தொகையுடன் வெளியேறினார் அமுதவாணன் - அதுவும் இத்தனை லட்சமா?

Tap to resize

வாரிசு படத்தை தமிழகம் முழுவதும் லலித் குமார் வெளியீடு செய்துள்ளார். அதிலும் சில ஏரியாக்களில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுதவிர வெளிநாட்டில் இப்படத்தை வேறு ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், உலகளாவிய வசூல் அதற்குள் எப்படி தெரியும்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், முழுமையான வசூல் நிலவரம் தெரிய சில நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்.

பொங்கலுக்கு துணிவு படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடி வருவதால் வாரிசு படம் ரூ.210 கோடி வசூலித்திருக்க 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விளம்பரத்துக்காக இதுபோன்று ஆதாரமற்ற கலெக்‌ஷன்களை வெளியிடுவதனால் தான் ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை கோடி கோடியாக உயர்த்திக் கொண்டே இருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். வாரிசு படக்குழு வெளியிட்டது உண்மையான வசூல் இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் கூறி உள்ளதால், அப்போ தில் ராஜு சொன்னது பொய்யா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சல்மான் கான் முதல் தீபிகா படுகோனே வரை... அம்பானி மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் அணிவகுத்த பாலிவுட் பட்டாளம்

Latest Videos

click me!