டப்மாஷ் மூலம் பிரபலமான மிருணாளினி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சாம்பியன் படத்தில் க்யூட் முஸ்லிம் பெண்ணாக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். டிக்டாக், டப்மாஷ் போன்ற சோசியல் மீடியாவில் பிரபலமான மிருணாளினிக்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஆரஞ்சு நிற சல்வாரில் அசரடிக்கும் மிருணாளினியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.