பாலாவின் "பரதேசி" படம் மூலம் அறிமுகமானவர் ரித்விகா. இருப்பினும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "மெட்ராஸ்" படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து, 'ஒருநாள் கூத்து', 'கபாலி', 'இருமுகன்' போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்விகா, வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரித்விகா நினைத்த புகழ் கிடைத்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்தில் வெளியான "இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு" படத்தில் ரித்விகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சிக்கு மாறியுள்ள ரித்விகா, தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.