அட கடவுளே இது என்ன உனக்கு வந்த சோதனை? அன்னபூரணியை தொடர்ந்து அம்மன் அவதாரம் எடுத்த டிக் டாக் பிரபலம்!

Published : Jan 01, 2022, 06:59 PM IST

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக இருப்பவர் அன்னபூரணி அரசு அம்மா (Annapoorani) தான். இவரை தொடர்ந்து தற்போது டிக் டாக் பிரபலமான சாதனா (tiktok Sadhana) அம்மன் அவதாரம் எடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
18
அட கடவுளே இது என்ன உனக்கு வந்த சோதனை? அன்னபூரணியை தொடர்ந்து அம்மன் அவதாரம் எடுத்த டிக் டாக் பிரபலம்!

கடந்த 2014 ஆம் ஆண்டு தொகுப்பாளினி லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய,  நிகழ்ச்சியான 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேறு ஒரு பெண்ணின் கணவருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்தவர் தான் இன்று அன்னபூரணி அரசு அம்மாவாக அவதாரம் எடுத்துள்ளார்.

 

28

இவரை பற்றிய சர்ச்சைகள் அடுத்தடுத்த எழ, இவருக்கு எதிராக சிலர் வழக்கு பதிவு செய்து... இதுபோன்ற போலி சாமியார்களை கைது செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

 

38

அதே நேரத்தில், தான் ஒரு போலி சாமியார் இல்லை என்றும்... ஆதி பராசக்தியின் மறுஉருவம் என்பது போல் கலர் கலராக ரீல் விட்டு கொண்டு, சில சமூக ஊடகங்களுக்கு அன்னபூரணி பேட்டி கொடுத்து  வருகிறார்.

 

48

இவருடைய கொடுமை ஒரு பக்கம் என்றால், டிக் டாக் மூலம் பிரபலமான... சாதனா அம்மன் அவதாரம் எடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

 

58

டிக்டாக் மூலம் கண்ட மேனிக்கு வீடியோ போட்டு லைக் வாங்கி வருபவர்களில் திருச்சி சாதனாவும் ஒருவர். இவர் திடீர் என நானும் அம்மன், என்னையும் பூஜை செய்யுங்கள் என்று, ஃபுல் மேக்கப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

 

68

இவரை பற்றி வெளியாகியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களில்... இவருக்கு கிராம மக்கள் மக்கள் பலர் ஒன்று சேர்ந்து, பூஜை செய்து ஆரத்தி எடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

 

 

78

அதே போல்... காலில் விழுந்து வணங்குவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இதில் உண்மையாகவே சாதனா அம்மன் அவதாரம் எடுத்துள்ளாரா? அல்லது வீடியோவிற்காக இப்படி நடித்துள்ளாரா என்பது தெரியவில்லை.

 

 

88

ஒரு வேலை இவரும் அம்மன் அவதாரம் எடுத்திருந்தால்... அது அந்த கடவுளுக்கே வந்த சோதனை தான் என, நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

 

 

click me!

Recommended Stories