Leo
நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தது. இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, மன்சூர் அலிகான், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி, இயக்குனர் மிஷ்கின், நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
Leo vijay
லியோ திரைப்படம் கடந்த மாதம் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வந்தது. திரைக்கு வந்த முதல் நாளே இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரே நாளில் ரூ.148 கோடி வசூலித்து மாஸ் காட்டி இருந்தது. இதையடுத்து பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால் குடும்பங்கள் கொண்டாடும் கேங்ஸ்டர் படமாக மாறிய லியோ உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ganapath
இந்த நிலையில் லியோவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆன கனபாத் என்கிற பாலிவுட் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய நஷடத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டைகர் ஷெராப் நடித்திருந்த இப்படம் சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதல் நாளே நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் இப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய நஷடத்தை கொடுத்த திரைப்படமாக மாறி இருக்கிறது. இப்படம் மொத்தமே ரூ.17 கோடி தான் வசூலித்து உள்ளதாம்.
Ganapath movie loss
இதுதவிர சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ உரிமம் ஆகியவை ரிலீசுக்கு முன்பே நல்ல விலைக்கு விற்கப்பட்ட போதிலும் ரூ.100 கோடி இழப்பை இப்படம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு போட்டியாக இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட விஜய்யின் லியோ திரைப்படம் வட மாநிலங்களில் மட்டும் ரூ.38 கோடி வசூலித்திருந்தது. கனபாத் படத்துக்கு அதில் பாதி வசூல் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... KGF எனும் மூன்றெழுத்து மந்திரத்தால் மாறிய வாழ்க்கை... ஒரே படத்தால் ஓஹோனு வாழும் யாஷின் சொத்து மதிப்பு இதோ