நிறைமாத கர்ப்பம்... கணவர் மற்றும் தோழிகளுடன் பார்ட்டி பண்ணும் துணிவு பட நடிகரின் மனைவி பூஜா! வைரல் போட்டோஸ்!

First Published Apr 1, 2023, 8:14 PM IST

நடிகையும், துணிவு பட நடிகர் ஜான் கொக்கேன் மனைவியும் நடிகையுமான பூஜா ராமசந்திரன்... நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கணவர் மற்றும் தோழிகளுடன் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் அதிகம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய தொகுப்பாளர்களில் ஒருவர் பூஜா ராமச்சந்திரன். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் இவர் தலைகாட்டினாலும், ரசிகர்கள் மனதில் ஆழமாக பதியும்படியான கதாபாத்திரங்கள் அமையவில்லை.

இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த போது,  தன்னுடன்  பணியாற்றிய தொகுப்பாளர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனது 45 ஆண்டு அனுபவத்தில் இதுவே முதல் முறை.! இளையராஜா சொன்ன வார்த்தை? பூரித்து போய் கையெடுத்து கும்பிட்ட சூரி!

இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இரண்டாவதாக... தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், மலையாள நடிகருமான ஜான் கோகென் என்பவரை மிகவும் எளிமையான முறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

ஜான் கோகென், மலையாள திரையுலகில் சில படங்களில் நடித்து வந்த நிலையில், பின்னர்  பா.ரஞ்சித் இயக்கத்தில்... ஆர்யா நடிப்பில், வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில், வேம்புலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் கீழடிக்கு விசிட் அடித்த சூர்யா! வாயே திறக்காமல் சர்ச்சைக்கு பதில் கொடுத்த ந

இதை தொடர்ந்து பொங்கல் வெளியீடாக வந்த, 'துணிவு' படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறு கதாபாத்திரம் என்றாலும், கவனம் பெற்ற கதாபாத்திரமாக அமைந்தது.

சமீபத்தில் நடிகை பூஜா ராமசந்திரன் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்ட நிலையில், அவ்வப்போது, கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை செய்து, அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

சில இரவுகளில்... என் விரல்கள் தொடைகள் வழியாக பயணிக்கிறது! நிர்வாண வரைபடத்துடன்.. பிரபல நடிகை சர்ச்சை பதிவு..!

மேலும் வித்தியாசமான பிரங்னென்சி போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். சமீபத்தில் இவருக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர் சூரி - பூஜா தம்பதி.

இந்நிலையில் தற்போது பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்... தங்களுடைய சந்தோஷத்தை  கணவன் - மனைவி இருவரும், நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தான் தற்போது, சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு! ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், உட்பட பலர் பங்கேற்பு! என்ன ஸ்பெஷல்?

click me!