பென்டாஸ்டிக் போர் (நவம்பர் 5)
சூப்பர்ஹீரோ ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் படம் இது. ரீட் ரிச்சர்ட்ஸ், சூ ஸ்டோம், ஜானி ஸ்டோம், பென் கிரிம் ஆகியோர் மீண்டும் உலகைக் காப்பாற்ற களம் இறங்குகிறார்கள். சில்வர் சர்ஃபர் தோற்றத்துடன் கலக்டஸ் பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழலில், தியாகம் மற்றும் குடும்ப பாசத்துடன் உலகை காப்பாற்றும் கதையாக வரவுள்ளது.
ஆல் ஹெர் பால்ட் (நவம்பர் 7)
அயர்லாந்தை மையமாகக் கொண்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர். மரிசா என்ற தாயின் மகன் மிலோ காணாமல் போக, அதற்குப் பின்னால் இருக்கும் “நான்கு குற்றப்பெண்கள்” பற்றிய மர்ம வலை வெளிச்சத்துக்கு வருகிறது.
ஆல்ஸ் ஃபேர் (நவம்பர் 4)
ராயன் மர்பி உருவாக்கிய லீகல் டிராமா. லாஸ் ஏஞ்சலஸில் சக்திவாய்ந்த பெண் வழக்கறிஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. கிம் கார்டாஷியன் “அலுரா கிராண்ட்” வேடத்தில்.
பேட் கேர்ள் (நவம்பர் 4)
ரம்யா என்ற இளம் பெண் சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிராக தன் விருப்பப்படி வாழ முயற்சிக்கும் கதை. காதல், மரியாதை, சுயநிலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் படம்.