BiggBoss Isaivani: திருமணம் குறித்து பேசாதத்துக்கு இது தான் காரணம்! உண்மையை போட்டுடைத்த இசைவாணி.!

Published : Dec 02, 2021, 07:26 PM IST

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss season 5 tamil) நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒருவரான இசை வாணி (Isai Vani) , தான் கடந்து வந்த பாதை குறித்து பேசும் போது தன்னுடைய திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது, பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதுகுறித்து தற்போது முதல் முறையாக வாய் திறந்துள்ளார் இசைவாணி.  

PREV
18
BiggBoss Isaivani: திருமணம் குறித்து பேசாதத்துக்கு இது தான் காரணம்! உண்மையை போட்டுடைத்த இசைவாணி.!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கி மிகவும் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் ஒரு மாதத்திற்கு பின் பல பிரச்சனைகள் பற்றி எரிந்து வருகிறது.

 

28

கடந்த நான்கு சீசன்களில் போட்டியாளராக 16 மட்டுமே கலந்து கொண்ட போதே... தினுசு தினுசாக பிரச்சனை வந்த நிலையில், இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டால் சொல்லவா வேண்டும்.

 

38

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத போட்டியாளராக முதலில் உள்ளே வந்தவர் என்றால் அது, இசை வாணி தான். ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக விளையாடினாலும், பின்னர் இவரது விளையாட்டு சூடு பிடிக்கதுவங்கியது . ஆனால் கொஞ்சம் ஓவராக வாயை விட்டு 50  நாட்களுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினார்.

 

48

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை பற்றி பேசிய போது... சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டோம், இப்போது வரை சொந்த வீடு இல்லை, உடுத்தி கொள்ள சரியான துணி இல்லை, அப்பாவுக்கு பாட யாரும் வாய்ப்பு தரவில்லை என பக்கம் பக்கமாக பேசிய இசை, ஏன் ஒரு வார்த்தை கூட தன்னுடைய திருமணம் குறித்து பேசவில்லை என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

 

58

அதாவது இசைவாணிக்கும், கானா பாடகர் ஸ்ரீ காந்த் தேவா என்பவருக்கும் திருமணம் ஆகி பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். ஆனால் அதுகுறித்து இவர் பேசவில்லை.

 

 

68

தற்போது இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் பல ரசிகர்கள் தொடர்ந்து இந்த கேள்வியை இவரிடம் முன்வைத்த நிலையில், ஏன் தன்னுடைய திருமணம் குறித்து பேசவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.

 

 

78

இதுகுறித்து இசைவாணி தற்போது கூறியுள்ளதாவது... தன்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக நான் அதை வெளிப்படுத்தாமல் இல்லை. அது எனக்கு தேவையில்லை அந்த நினைவுகள் வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

 

 

88

திருமண வாழ்க்கையில் மனம் நொந்து இதோடு தன்னுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணிய நேரத்தில் இவரை மீண்டும் தேற்றி கொண்டுவந்தது, இவருடைய கானா பாடல்கள் தான் என்றும் கூறியுள்ளார்.

 

 

click me!

Recommended Stories