இன்ஸ்டாகிராம் மூலம் பணத்தை அள்ளும் பிரியங்கா சோப்ரா... ஒத்த போஸ்ட்டுக்கு கோடிகளில் கொட்டும் துட்டு...!

First Published | Jul 2, 2021, 11:11 AM IST

உலக அளவில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு விளம்பர பதிவுகளை வெளியிடுவது வழக்கம். 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
Tap to resize

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி உடையில் தோன்றி மிரள வைக்கிறார்.
அதனால் தானோ என்னவோ பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 65 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதன் மூலமாக பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்ட்டுக்கு எவ்வளவு கோடிகளை சம்பதிக்கிறார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
உலக அளவில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு விளம்பர பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அப்படி இந்திய அளவில் உள்ள நடிகைகளிலேயே பிரியங்கா சோப்ரா தான் டாப்பில் உள்ளார்.
அதாவது 65 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள பிரியங்கா சோப்ரா ஒரு பதிவை போஸ்ட் செய்ய ரூ.3 கோடி ரூபாய் வரை சம்பந்தப்பட்ட விளம்பரதாரர்களிடம் இருந்து பெறுகிறாராம். ஏற்கனவே ஒரு படத்திற்கு ரூ.22 கோடி வரை சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ரா, சோசியல் மீடியா மூலமாகவும் சைடு கேப்பில் கோடிகளை குவித்து வருகிறார்.

Latest Videos

click me!