Cinema : ‘தெகிடி’ ரமேஷ் முதல் ‘மன்மதன்’ முருகன் வரை... முதல் படமே மாஸ் ஹிட் கொடுத்த பின் காணாமல் போன கோலிவுட் இயக்குநர்கள் ஒரு பார்வை

Published : Sep 26, 2026, 07:08 PM IST

Blockbuster Debut... Forgotten Directors : முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர்கள் சிலர், அதன்பின் ஆள் அட்ரஸே தெரியாமல் போய் உள்ளனர். அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

PREV
15
ருத்ரையா

1978 ஆண்டு கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் இணைந்து நடித்த "அவள் அப்படித்தான்" படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இந்த ருத்ரையா. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 1980 இல் "கிராமத்து அத்தியாயம்" என்கிற படத்தை ருத்ரையா இயக்கினார். அப்படம் தோல்வியை தழுவிய பின் காணாமல் போனார். அதன் பின் எந்த படமும் அவர் இயக்கவில்லை.

போலீஸ்காரங்களுக்கு லீவு இல்ல‌.. பேச்சு ஒன்னு.. செயல் ஒன்னு.. விஜய் அரசை சாடிய நடிகர் கார்த்தி

25
அமித்

இசையமைப்பாளர் ஜிப்ரானின் சகோதரரான அமித், கடந்த 2015ம் ஆண்டு ஹெய்ஸ்ட் காமெடி ஜானரில் இயக்கிய படம் தான் "ராஜதந்திரம்". இப்படம் கம்மி பட்ஜெட்டில் உருவானாலும் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்திற்கான இரண்டாம் பாக அறிவிப்பும் வெளியானது. அப்படத்தின் முதல் 6 நிமிட காட்சிகள் கூட‌ யூடியூப்பில் உள்ளது. ஆனால் படமும் என்ன ஆனது என தெரியவில்லை, இயக்குநரும் அதன்பின் படமெடுக்கவில்லை.

35
தேசிங்கு பெரியசாமி

2020ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி ஆனவர் தான் தேசிங்கு பெரியசாமி. அப்படத்திற்கு பின் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவை வைத்து ஒரு வரலாற்று படத்தை இயக்க கமிட் ஆனார். அப்படம் தாமதம் ஆனபின்னர், சிம்புவே அதனை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படமும் கிடப்பில் போடப்பட்டது. இதனால் தேசிங்கு பெரியசாமி அடுத்து என்ன படம் எடுக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.

45
ஏஜே முருகன்

2004ம் ஆண்டு நடிகர் சிம்பு கதையில் சிவப்பு ரோஜாக்கள் பட பாணியில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் "மன்மதன்". அதை இயக்கியவர் ஏஜே முருகன். அந்த படம் ரிலீஸ் ஆன போதே பல பிரச்சனைகளுக்கு உள்ளானது. மன்மதன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த ஏஜே முருகன் அடுத்து எந்த படமும் இயக்கவில்லை. அவருக்கு தமிழ் சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

55
ரமேஷ்

2014ம் ஆண்டு தெகிடி எனும் தரமான த்ரில்லர் படத்தை கொடுத்தவர் ரமேஷ். அசோக் செல்வன், ஜனனி ஆகியோர் நடிப்பில் வெளியான அப்படம், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அதன்பின் அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் எந்த படமும் இயக்கவில்லை. தற்போது ஒரு படம் இயக்கும் பணியில் உள்ளதாக கடந்த ஓராண்டாகவே தகவல் பரவி வருகிறது. ஆனால் அதுபற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.

Meesaya Murukku-2 Review: 3 வேடங்களில் மிரட்டிய ஆதி... முதல் பாதி ஜென் ஸி, 2-ம் பாதி ஃபுல் எனர்ஜி; 'மீசைய முறுக்கு-2' எப்படி இருக்கு?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories