சத்ய சிவா இயக்கத்தில் சசிக்குமார் நடித்த ப்ரீடம் திரைப்படம் ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எழில் இயக்கத்தில் விமல், விஜய் டிவி புகழ், சிங்கம் புலி, ரவி மரியா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் தேசிங்கு ராஜா 2 திரைப்படமும் ஜூலை 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
மேலும் வனிதா விஜயகுமார் ஹீரோயினாக நடித்து இயக்கியுள்ள Mrs and Mr திரைப்படமும் ஜூலை 11ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் நடித்துள்ளார். இப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.
இந்த வாரம் திரைக்கு வர உள்ள திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். படத்தின் மூலம் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகிறார். இது தவிர மாயக்கூத்து, தோற்றம், அகதி ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் நாளை திரைக்கு வருகிறது.