2025 ஆம் ஆண்டில் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சாய் பல்லவி உருவெடுத்துள்ளார். அவரது இயல்பான நடிப்பு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார். சமீபத்தில், "ராமாயணா" என்ற புராணப் படத்தில் நடித்ததற்காக அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார், இதற்காக அவருக்கு சுமார் ரூ.18–20 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
25
நயன்தாரா சம்பளம்
பத்தாண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகை நயன்தாரா, தெற்கில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் ஒருவராகத் தொடர்கிறார். 2025 ஆம் ஆண்டில், அவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். "ஜவான்" படத்தில் அவர் பாலிவுட்டில் அறிமுகமானதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.10 கோடி வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
35
ராஷ்மிகா மந்தனா சம்பளம்
நேஷனல் க்ரஷ் என்று பிரபலமாக அறியப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தின் மூலம் ட்ரெண்டிங் ஆனார். 2025 ஆம் ஆண்டில், சல்மான் கானின் வரவிருக்கும் "சிக்கந்தர்" திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ.13 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. "புஷ்பா 2" படத்திற்கான அவரது சம்பளமும் சுமார் ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தென்னிந்திய திரைப்படத் துறையில் நீடித்து இருக்கும் த்ரிஷா, இன்னும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். இவர், "விஸ்வம்பர" படத்தில் நடித்ததற்காக சுமார் ரூ.12 கோடி சம்பாதித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றிகரமான படங்கள் மூலம் தொடர்ந்து தன்னை நிரூபித்து வரும் நடிகை த்ரிஷா, இன்றளவும் பெரிய ரசிகர் பட்டாளத்தால் பின்பற்றப்படுகிறார்.
55
சமந்தா சம்பளம்
நடிகை சமந்தா தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். 2025 ஆம் ஆண்டில், "சிட்டாடல்: ஹனி பன்னி" என்ற வெப் சீரிஸில் நடித்ததற்காக அவர் ரூ.10 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் வரும் படங்களின் பட்ஜெட்டை பொறுத்து ரூ.3 கோடி முதல் ரூ.8 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.