தமிழக பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல், புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காலையில் இருந்தே மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், போன்ற மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.