'சொர்க்கவாசல்' ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்றதா? வெளியானது முதல் நாள் வசூல் விவரம்!

First Published | Nov 30, 2024, 10:47 AM IST

Sorgavaasal Day 1 Collection: ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி உள்ள 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

RJ Balaji Movie

ஆர் ஜே- வாக இருந்து ஒரு காமெடி நடிகராக தன்னுடைய திரை உலக வாழ்க்கையை துவங்கிய ஆர்.ஜே பாலாஜி. தற்போது ஹீரோ சப்ஜெக்ட் கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம், ரன் பேபி ரன், போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

Sorgavaasal Movie Detials

கடைசியாக வெளியான 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்தது. இதை தொடர்ந்து இயக்குனர் சித்தார்த் விஸ்வநாதன் எழுதி - இயக்கி இருந்த 'சொர்க்கவாசல்' திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ளார் .இதுவரை காமெடி கலந்த கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்த ஆர்.ஜே.பாலாஜியை மற்றொரு பக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது இந்த படம்.

நயன்தாரா முதல் மஞ்சு வாரியர் வரை; அதிகம் சம்பளம் வாங்கும் 7 தென்னிந்திய நடிகைகள்!
 

Tap to resize

Sorgavaasal RJ Balaji Acting

ஆர்.ஜே.பாலாஜியும்... தன்னால் காமெடியை தாண்டி இப்படிப்பட்ட படங்களிலும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தமுடியும் என நிரூபித்துள்ளார். ஜெயில் கான்செப்ட் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள 'சொர்க்கவாசல்' படத்தில் சானியா ஐயப்பன் கதாநாயகியாக நடிக்க, செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துளளார்.
 

Sorgavaasal Box Office

இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  செய்யாத தவறுக்காக சிறைக்குச் செல்லும் ஒரு கைதியை பற்றிய கதைதான் சொர்க்கவாசல். மேலும் இந்த படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். ஆர்.ஜே.பாலாஜி அல்டிமேட்டாக நடித்திருப்பதாகவும், இந்த படத்தை கொண்டு சென்றுள்ள விதம் மிகப்பெரிய பிளஸ் என கூறப்படுத்திகிறது.

மீடியாவே வேண்டாம்! சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் அதிரடி முடிவு - ஏன் தெரியுமா?
 

Sorgavaasal Based on True Story

முதல் பாதியை எமோஷ்னலாக எடுத்துள்ள இயக்குனர், இரண்டாம் பாதியில் சிறையில் நடக்கும் சில கொடூரங்களை காட்டியுள்ளார். செல்வராகவன் கேங் ஸ்டாராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் இசை, பிஜிஎம், ஒளிப்பதிவு என அனைத்துமே ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது என கூறப்படுகிறது. இந்த படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூபாய் 80 லட்சம் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி போல் ஒரு வளர்ந்து வரும் நடிகரின் படம் முதல் நாளே இவ்வளவு பெரிய வசூல் செய்துள்ளது இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்வதாக திரைப்பட வணிகவியாளர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!