Published : Nov 30, 2024, 09:27 AM ISTUpdated : Nov 30, 2024, 09:30 AM IST
Naga Chaitanya Shobita Thulipala Wedding Gifts : நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
Naga Chaitanya Shobita Thulipala Wedding Gifts : சினிமாவில் காதல் முறிவு, திருமண விவாகரத்து, 2ஆவது திருமணம் இதெல்லாம் இப்போது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு சமந்தா உடனான விவாகரத்துக்கு பிறகு இப்போது 2ஆவது திருமணம் நடைபெற இருக்கிறது.
ஆம், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அதுவும் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டூடியோவில் வைத்து நடைபெற இருக்கிறதாம். இந்நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனராம். அதோடு பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடைபெற இருக்கிறது. தமிழ் சினிமாவில் வெளியான பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் மூலமாக பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா.
35
Naga Chaitanya Dhulipala Pre Wedding
திருமணத்திற்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், திருமண கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். ஆம், ஹல்தி எனப்படும் மஞ்சள் பூசும் விழாவை திருமண ஜோடிகள் தொடங்கியுள்ளனர். இதில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் உற்றார், உறவினர்கள், குடும்பத்தினர் என்று அனைவரும் மஞ்சள் பூசி மகிழ்வார்கள். அதன் பிறகு மெஹந்தி, சங்கீத், திருமணம் என்று நிகழ்ச்சியே களைகட்டும்.
45
Naga Chaitanya Shobita Dhulipala Marriage
இந்த நிலையில் தான் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், சோபிதாவின் குடும்பத்தினர் நாக சைதன்யாவுக்கு பைக் மற்றும் ஆடி கார், ஹைதராபாத்தில் ஆடம்பரமான சொகுசு வில்லா மற்றும் தங்கம் ஆகியவற்றை பரிசாக கொடுத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
55
Naga Chaitanya Sobhita Dhulipala Marriage
எனினும், நாகர்ஜூனாவின் குடும்பத்தினர் வாழ்நாள் முழுவதும் தனது மகனை அன்பாக பார்த்து கொண்டால் போதும் என்று சோபிதாவின் பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. தற்போது நாகர்ஜூனாவும் தன்னுடைய மகனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். லெக்ஸஸ் LM MPV மாடல் கொண்ட அந்த காரின் விலை சுமார் ரூ.2.5 கோடி. தளபதி விஜய்யும் இந்த வகை மாடல் காரில் தான் டிராவல் செய்கிறார். சாலையில் வலம் வரும் இந்த காரில் பல வீடியோக்களில் நாம் பார்த்திருப்போம்.