வொண்டர் வுமன் பட நடிகை வீட்டில் விசேஷம்... க்யூட் புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்...!

First Published | Jul 2, 2021, 6:56 PM IST

கால் கடாட், ஜான் வர்சானோ தம்பதிக்கு ஏற்கனவே அல்மா என்ற 9 வயது மகளும், மாயா என்ற 4 வயதும் உள்ள நிலையில், 3வதாக அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

வொண்டர் வுமன் படம் மூலமாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் இஸ்ரேலிய அழகியான கால் கடாட். ரசிகர்களின் மனதில் அழகு ராணியாக சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் கால் கடாட் திருமணமானவர்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜான் வர்சானோவை திருமணம் செய்துகொண்ட கால் கடாட், இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் கருவுற்று இருப்பதை ரசிகர்களுக்கு அறிவித்தார்.
Tap to resize

கால் கடாட், ஜான் வர்சானோ தம்பதிக்கு ஏற்கனவே அல்மா என்ற 9 வயது மகளும், மாயா என்ற 4 வயதும் உள்ள நிலையில், 3வதாக அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு டேனியாலா என்ற பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர், குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள கால் கடாட், “இது என் அழகிய குடும்பம். இதைவிட அதிக மகிழ்ச்சியாக நான் இருக்க முடியாது. டேனியாலாவின் வரவால் நாங்கள் அனைவரும் மகிழ்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு இறுதியில் அவரது ’வொண்டர் உமன் 1984’ திரைப்படம் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
மேலும் பிரபல கிரைம் த்ரில்லர் நாவலாசிரியரான அகதா க்ரிஸ்டியின் ’டெத் ஆன் த நைல்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்திலும் கால் கடாட் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!