Trisha : 2015-ல் தொழிலதிபர் ஒருவருடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அது முறிந்து போனது. அந்தப் பிரிவுக்கான உண்மைக் காரணத்தை திரிஷாவே ஒரு பேட்டியில் உடைத்துப் பேசி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, 40 வயதைக் கடந்த பிறகும் தொடர்ந்து பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டுமின்றி, பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் பிரம்மாண்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கருப்பு திரைப்படம் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‘விஸ்வம்பரா’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது
திரிஷாவின் திரைப்பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக சென்றாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, திருமணம் குறித்த கேள்விகள் அவரைச் சுற்றி நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. ஆனால், சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு அவரது திருமணம் தொடர்பாக நடந்த சம்பவம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரிஷாவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருந்தார். இதனால் விரைவில் திரிஷாவுக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே அந்த திருமணம் நின்றுபோனது. திருமணத்திற்குப் பிறகு திரிஷா திரைப்படங்களில் நடிப்பதைத் தொடரக்கூடாது என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டதாக அப்போது பல்வேறு செய்திகள் வெளியாகின.
34
சினிமாவை விட்டுக்கொடுக்க மறுத்த திரிஷா
நிச்சயதார்த்தம் முறிந்த பின்னர் அளித்த பேட்டி ஒன்றில் திரிஷா தனது முடிவு குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். திருமணம் செய்யவிருந்த நபர், சினிமாவில் இருந்து விலகுமாறு தன்னிடம் கூறியதாகவும், அதனை ஏற்க முடியாத காரணத்தால் திருமணத்தை நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது வாழ்க்கையில் சினிமா எவ்வளவு முக்கியமானது என்பதையும் திரிஷா அப்போது தெளிவுபடுத்தியிருந்தார். திருமணத்திற்காக நடிப்பை கைவிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலத்தில் மட்டுமே சினிமாவுக்கு இடைவெளி எடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். சினிமாவில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் ஆசை என்றும் திரிஷா தெரிவித்திருந்தார்.
நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு, தனியாக இருப்பதிலேயே தான் மகிழ்ச்சியாக இருப்பதாக திரிஷா கூறியிருந்தார். இதற்கிடையே, அவரது பெயர் தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. எனினும், இதுபோன்ற வதந்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் திரிஷா தனது திரைப்படப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும், திருமணத்தை விட தனது சினிமா பயணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் திரிஷாவின் அந்த முடிவு தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.