ஜாமீனில் வெளிய வந்து ஒருநாள் கூட ஆகல... சுஷாந்த் காதலியை துரத்தும் புது சிக்கல்...!

First Published Oct 8, 2020, 12:59 PM IST

இதையடுத்து மும்பை பைகுல்லா சிறையில் இருந்த ரியா சக்ரபர்த்தி நேற்று விடுதலை செய்யப்பட்டார். 

பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
அவருடைய மரணத்தில் காதலி ரியா சக்ரபர்த்திக்கு தொடர்பு இருப்பதாக சுஷாந்தின் தந்தை புகார் அளித்ததன் பேரில், செப்டம்பர் மாதம் 8ம் தேதி ரியா சக்ரபர்த்தி கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
undefined
அதாவது ரியா சக்ரபர்த்தியின் செல்போனியில் சிக்கிய வாட்ஸ் அப் மெசெஜ்கள் மூலமாக அவருக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது.
undefined
இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ரியா அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும், சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
undefined
மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூற, தற்போது அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
undefined
மேலும் இதில் தொடர்புடைய ரியாவின் சகோதரர் சோவிக் சக்ரபோத்தி, சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
undefined
இவர்கள் மூவரும் நேற்று மும்பை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
undefined
சிறப்பு நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் ரியா சக்ரபர்த்தி, அவருடைய சகோதரர் திபேஷ் சாவந்த், சாமுவேல் மிரண்டா ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
undefined
மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஒரு மாதத்திற்கு பிறகு ரியாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ள போதும், தினமும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சென்று கையெழுத்து போட வேண்டும். மேலும், தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், அனுமதி பெறாமல் எங்கேயும் செல்லக் கூடாது என பல நிபந்தனைகளுடன் ரியா சக்ரபர்த்திக்கு ஜாமீன் வழங்கியது.
undefined
இதையடுத்து மும்பை பைகுல்லா சிறையில் இருந்த ரியா சக்ரபர்த்தி நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
undefined
வழக்கு விசாரணையில் இருக்கும் போது ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் ஒரு மாதத்திற்கு பிறகு வெளியே வந்த ரியா சக்ரபர்த்தி மீண்டும் புது சிக்கலை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!